ஒடிசா மாநிலத்தில் ஒரு வீட்டில் 72 வயது மூதாட்டி 3 வருடமாக டாய்லெட்டில் வசித்து வந்த சோக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மயூர்பஞ்ச் மாவட்டம் கன்னிகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் திரெளபதி பகேரா ( 72) தனது மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். அவருக்கு ஆதரவு யாரும் இல்லாததால் அவருக்கு வீடு இல்லை. இதனால் இங்கு அரசு தரப்பில் கட்டப்பட்டிருந்த உள்ள டாய்லெட்டில் தனது உடமைகளை வைத்து வசிக்க துவங்கினார். இந்த அறையில் அவர் சமையல் செய்வதும், இரவு அங்கேயே தூங்குவதுமாக வாழ்க்கை கழித்து வருகிறார்.


 



 


இந்த தகவல் வெளியானதும் கிராம அதிகாரிகளிடம் கேட்டபோது, தங்களிடம் வீடு வழங்கும் அதிகாரம் இல்லை என்றும் இதுகுறித்து அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வீடு ஒதுக்க மேல் அதிகாரிகளிடம் முறையிடுவோம் என்றனர்.