கதவில் ஆணி அடித்து, துணிகளை மாட்டுபவரா நீங்கள்... வாழ்க்கையே நரகமாகிவிடும் - எச்சரிக்கும் வாஸ்து!

Vastu Tips: கதவில் ஆணி அடித்து துணிகளை மாட்டி வைப்பதால் உங்கள் வாழ்க்கை எவ்வளவு பாதிப்புகளுக்கு உள்ளாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

வாஸ்து சாஸ்திரத்தில் (Vastu Sastra) வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருள்களுக்கும், திசைகளுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில், கதவும் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

1 /8

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நீங்கள் வீட்டில் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு விளைவுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் அன்றாடம் செய்யும் சில விஷயங்கள் உங்களுக்கு பெரிய பாதிப்புகளை கூட ஏற்படுத்தலாம்.

2 /8

குறிப்பாக, பலரின் வீடுகளில், பேச்சிலர் ரூம்களில் கதவுக்கு பின்னால் பயன்படுத்திய துணிகளை ஆணியில் தொங்கவிடும் பழக்கம் இருக்கும். இது வாஸ்து சாஸ்திரத்தின் படி தவறு என கூறப்படுகிறது. 

3 /8

வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் உள்ள கதவுகளுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. உங்கள் வீட்டிற்கு நல்ல ஆற்றல்கள் கதவுகள் மூலமாக தான் வரும். அப்படி இருக்க நீங்கள் கதவில் ஆணி அடித்து துணிகளை மாட்டி வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பிரச்சனைகளை உண்டாக்கும் என்கிறது. 

4 /8

ஆணி அடித்து துணிகளை அதிகமாக தொங்கவிடுவதால், அது கதவின் மீது அதிக அழுத்தத்தை உண்டாகி கதவை பழுதாக்கும் வாய்ப்புகள் உள்ளன. கதவை அடைத்தால் அது சரியாக அடைப்படாமல் போகும்.  

5 /8

கதவு சரியாக அடைப்படாமல் போனால் நேர்மறையான ஆற்றல்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்து, எதிர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதனால் பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம், குடும்பத்தில் பிரச்சனை போன்றவை ஏற்படலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

6 /8

உதாரணத்திற்கு நீங்கள் கதவில் மட்டும் துணிகளில் அதிக தூசிகள் சேரும். தூசிகள் சேரும் ஆடைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் உங்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதன் மூலம் நீங்கள் மருத்துவர்களுக்கு அதிக அதிகம் செலவு செய்ய நேரிடும். இதுபோல் பிரச்னைகள் வரலாம் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.   

7 /8

எனவே துணிகள் மற்றும் ஹேங்கரை கதவில் அடிப்பதற்கு பதில் சுவற்றில் ஒரு ஓரமாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் எவ்வித பிரச்சனையும் தவிர்க்கலாம் என்கிறார்கள்.  

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை.