7th Pay Commission latest news:   7 வது ஊதியக்குழுவின் ஒரு பகுதியாக 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான  அகவிலைப்படியை மத்திய அரசு 4 சதவீதம் உயர்த்தியது. ஆனால், கொரோனா பரவல் தொடங்கியதால், நாட்டில் முழுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்ததால் அது அமல்படுத்தப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்  அகவிலைப்படி   (Dearness Allowance) ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் (Dearness Relief ) ஆகியவற்றை ஜூலை 2021 வரை நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.


Also Read | 7th Pay Commission: குடும்ப ஓய்வூதியத்தில் மிகப் பெரிய நிவாரணம், விதிகளில் மாற்றம்


இந்நிலையில், ஜூலை மாதம் முதல் மீண்டும்  7 வது ஊதியக்குழுவின் படி, டிஏ (DA), டிஆர் (DR)  வழங்கப்படுகிறது என்று சமூக வலை தளங்களில் வதந்திகள் வைரலாக பரவின. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது. அதில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.


இது தொடர்பான பொய் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன என்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அகவிலைப்படியை அடுத்த மாதம் வழங்குவதா அல்லது அதனை மேலும் 6 மாத காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அரசு முடிவெடுக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


Also Read | 7th Pay Commission: PF மாற்றம், கிராச்சுட்டி, டிஏ, டிஆர் நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR