தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையும் 46 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?

Latest News Malayalam Actress In Thalapathy 69 Movie : நடிகர் விஜய்யின் 69வது படத்தில், பிரபல மலையாள நடிகை ஒருவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 30, 2024, 10:19 AM IST
  • தளபதி 69 படத்தில் புது நடிகை!
  • அவருக்கு 46 வயது..
  • அஜித், ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்..
தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையும் 46 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?  title=

Latest News Malayalam Actress In Thalapathy 69 Movie : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் நடிகர் விஜய், தனது கடைசி மற்றும் 69வது படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிப்பவர்கள் குறித்த விவரங்கள் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தளபதி 69:

தமிழக வெற்றிக்கழகம்’ அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், விரைவில் சினிமாவை விட்டு விலகி முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருக்கிறார். இந்த நிலையில், தான் கடைசியாக கமிட் ஆகியிருக்கும் படங்களில் நடித்து முடித்து விட்டு, மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள போவதாக அவர் தெரிவித்திருந்தார். 

விஜய் நடிப்பில் தி கோட் படம் கடைசியாக வெளியானது. இதையடுத்து, சில வாரங்களுக்கு முன்னர் ‘தளபதி 69’ படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை, கே.வி.என் நிறுனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டரில் ஒருவருடைய கை, தீப்பந்தம் பிடித்திருப்பது போல இருக்கும் ஓவியம் இடம் பெற்றிருந்தது. 

விஜய்யுடன் இணையும் 46 வயது நடிகை:

நடிகர் விஜய்யுடன், தளபதி 69 படத்தில் யாரெல்லாம் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள், சினிமா வட்டாரங்களில் இருந்து கடந்த சில நாட்களாக கசிந்து வருகிறது. அந்த வகையில், விஜய்யுடன் பிரபல மலையாள நடிகர் ஒருவர் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

அந்த நடிகை வேறு யாருமில்லை, மஞ்சு வாரியர்தான். கோலிவுட்டில் த்ரிஷா, நயன்தாரா போன்ற நாயகிகள் எப்படியோ, மலையாள திரையுலகில் டாப் நடிகையாக விளங்கி வருகிறார் மஞ்சு. தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில் நடித்த இவர், அடுத்து அஜித்துடன் இணைந்து ‘துணிவு’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். 

Manju Warrier

வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர், விஜய்யுடன் இணைந்து தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஹெச்.வினோத் படத்தில் நடித்தது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது துணிவு படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தான் சரியாக நடிக்கவில்லை என்று ஹெச்.வினோத்திடம் கூறினாராம். அதற்கு அவர், “இந்த காட்சிக்கு இவ்வளவு போதும்” என்றாராம். அடுத்த படத்தில் உங்கள் நடிப்புக்கு ஏற்ற கதாப்பாத்திரம் கொடுப்பதாக தன்னிடம் கூறியதாக மஞ்சு வாரியர் சிரித்துக்கொண்டே கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள், “ஒருவேளை தளபதி 69 படத்திலும் இவர் இருக்கிறாரோ..” என்று சந்தேகித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மஞ்சு வாரியர் விஜய்யுடன் தளபதி 69 படத்தில் நடிப்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் விஜய்யுடன் நடிப்பவர்கள் யார்? கதை என்ன? முழு விவரம்!

சமீபத்தில் வேட்டையன் படத்தில் இருந்து ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது. இந்த பாடலில் சின்ன பெண் போல நடனமாடியிருந்த இவர், சில நாட்களுக்கு முன்புதான் தனது 46வது வயதை கடந்து வந்தார். இதைப்பார்த்த பலர், “இவ்வளவு வயதாகியும் கொஞ்சம் கூட இவருக்கு இளமை குறையவில்லையே” என்று புகழ்ந்து வருகின்றனர். 

வேறு யாரெல்லாம் நடிக்கின்றனர்?

தளபதி 69 திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். அதே போல, பிரேமலு படம் மூலம் பிரபலமான மமிதா பைஜுவும் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறாராம். 

மேலும் படிக்க | ஒரு வழியாக வெளியானது தளபதி 69 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! என்ன அப்டேட் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News