7th Pay Commission Latest news: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு முறையுடன் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஊதிய உயர்வு குறித்த பல நல்ல செய்திகள் வந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமனாது குடும்ப ஓய்வூதியம் குறித்தது. குடும்ப ஓய்வூதியத்தின் மேல் உச்சவரம்பு 45,000 ரூபாயிலிருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7 ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திய பின்னர், மிக உயர்ந்த ஊதியம் மாதத்திற்கு ரூ .2,50,000 ஆக மாற்றப்பட்டது. மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள் 1972 இன் விதி 54 இன் துணை விதிகளில் (11) பரிந்துரைக்கப்பட்டுள்ள தொகை மாதத்திற்கு 1,25,000 ரூபாய் என்றும் (2,50,000 ரூபாயில் 50 சதவிகிதம்) 75000 ரூபாய் என்றும் ( 2,50,000 ரூபாயில் 30 சதவிகிதம்) மாற்றப்படுள்ளது.


இந்த நடவடிக்கை இயற்கை எய்திய மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல முறையில் வாழ்வதற்கான வழியை அளிப்பதோடு அவர்களுக்கு போதுமான நிதி பாதுகாப்பையும் வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.


ஒரு குழந்தையின் பெற்றோர் இறந்துவிட்டால், அக்குழந்தை இரண்டு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்தால், அக்குழந்தைக்கு கிடைக்கக்கூடிய தொகை குறித்தும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) தெளிவுபடுத்தியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் தெரிவித்தார்.


இதுபோன்ற வழக்குகளில் இரு குடும்ப ஓய்வூதியங்களின் (Family Pension) மொத்த தொகை மாதத்திற்கு ரூ .45,000 மற்றும் மாதத்திற்கு ரூ .27,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று முந்தைய அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை முறையே 50 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற விகிதத்தில் தீர்மானிக்கப்படுகின்றன. 6 வது சிபிசி பரிந்துரைகளின்படி மிக அதிக தொகை அளவான ரூ .90,000 இதற்கு அடிப்படையாக எடுக்கப்பட்டது.


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் DA, DR, பதவி உயர்வு பற்றிய good news விரைவில்


மேம்படுத்தப்பட்ட தொகை குறித்து சிங் கூறுகையில், இரு குடும்ப ஓய்வூதியங்களின் தொகை இப்போது மாதத்திற்கு ரூ .1,25,000 ஆக கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். இந்த அளவு முந்தைய உச்சவரம்பை விட இரண்டரை மடங்கு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போதுள்ள விதிப்படி, பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக இருந்து, அவர்களில் ஒருவர் அரசு சேவையில் இருக்கும்போதோ, அல்லது ஓய்வுபெற்ற பிறகோ இறந்துவிட்டால், குடும்ப ஓய்வூதியம் வாழ்க்கைத் துணைக்கு அளிக்கப்படும். வாழ்க்கைத் துணை இறந்தால், அவர்களது குழந்தைக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியங்களும் வழங்கப்படும். சில தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்படும் நிலையில் இது அளிக்கப்படும்.


இது தவிர, மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி அதாவது TA கோரும் விதியை மத்திய அரசாங்கம் மாற்றியுள்ளது. பணியாளர் துறையின் சமீபத்திய தகவல்களின் படி, இப்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களது TA-வைக் கோர தங்கள் போர்டிங் பாஸ் அல்லது பயண டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.


மேலும், சுகாதார காப்பீட்டிலும் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மருத்துவ சிகிச்சைகளைப் பெற சி.எச்.ஜி.எஸ் (மத்திய அரசு சுகாதார திட்டம்) உடன் பட்டியலிடப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பதிலாக ஒரு தனியார் மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்ததால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சுகாதார காப்பீட்டு சலுகைகளை (Mediclaim) மறுக்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ALSO READ: 7th Pay Commission: TA Claim செய்யும் விதிகளில் தளர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR