7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அபரிமிதமான லாபத்தைக் கொண்டு வரப் போகிறது. ஊழியர்ககளின் கொண்டாட்டங்கள் அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய ஊழியர்களின் நன்மைக்காக மோடி அரசு மொத்தம் 3 முடிவுகளை எடுக்கக்கூடும். இவற்றில் மிகப்பெரிய நல்ல செய்தி ஊதியம் தொடர்பானதாக இருக்கும். இதற்கான அறிகுறிகள் வந்ததிலிருந்து மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட காலமாக, 2023 ஆம் ஆண்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து முடிவெடுக்கப்படக்க்டும் என கூறப்படு வருகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 2024 தேர்தலுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் இந்த பெரிய பரிசை வழங்கக்கூடும் என தெரிகிறது. இது தவிர, அகவிலைப்படி, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் முடிவு எடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


ஊழியர்களின் ஊதியத்தில் நேரடியாக ரூ. 8000 உயர்த்தப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 கிடைத்து வருகிறது. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிகையை நிறைவேற்றும் வகையில், அவர்களது ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசு அதிகரிக்கக்கூடும் என அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்ரன. பிப்ரவரி 1, 2023ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்கலாம்.


ஒவ்வொரு ஆண்டைப் போலவே, 2023 ஆம் ஆண்டிலும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளது. ஜனவரி 2023க்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். இதுவரையிலான பணவீக்கப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​அடுத்த ஆண்டும் ஜனவரியில் 4 சதவீத டிஏ உயர்வு இருக்கலாம் என்று தெரிகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: 2023ம் ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு லாட்டரி! சம்பளம் இரட்டிப்பாக்கப்படும் 


இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வரவேண்டியுள்ளது. இந்த 3 மாதங்களில், குறியீட்டெண் தொடர்ந்து வேகமாக வளர்ச்சியடைந்தால், அகவிலப்படி அதிகரிப்பு நிச்சயமாக 4% இருக்கும். குறியீட்டில் இடைவெளி இருந்தாலோ அல்லது அது அதிகரிக்காமல் இருந்தாலோ, அகவிலைப்படியில் 3 சதவீகித அதிகரிப்பு இருக்கக்கூடும். 


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்குமா?


2023 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அரசு அமல்படுத்தக்கூடும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிரைவேற்ற பழைய ஓய்வூதியமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும், தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடம் உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக்காட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அதிக நன்மைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடைக்காது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ