Sep 12 முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள், இன்று முன்பதிவு துவக்கம்: முழு பட்டியல் இதோ!!

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்தியா போராடிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், செப்டம்பர் 12 முதல் மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
புதுடெல்லி: அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்தியா போராடிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், செப்டம்பர் 12 முதல் மேலும் 80 சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே (Indian Railways) அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 10 முதல் தொடங்கும்.
ஏற்கனவே இயங்கும் 230 ரயில்களுக்கு கூடுதலாக இந்த 80 ரயில்களும் இயக்கப்படுகின்றன. ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், "எட்டு புதிய சிறப்பு ரயில்கள் அல்லது 40 ஜோடி ரயில்கள் செப்டம்பர் 12 முதல் இயங்கத் தொடங்கும். முன்பதிவு (Reservations) செப்டம்பர் 10 முதல் தொடங்கும். இவை ஏற்கனவே இயங்கும் 230 ரயில்களுக்கு கூடுதலாக இயங்கும்." என்றார்.
எந்த ரயில்களில் நீண்ட காத்திருப்பு பட்டியல் உள்ளது என்பதை தீர்மானிக்க தற்போது இயக்கப்படும் அனைத்து ரயில்களும் கண்காணிக்கப்படும் என்று யாதவ் சுட்டிக்காட்டினார். மேலும், தேர்வுகள் மற்றும் அதைப் போன்ற பிற அத்தியாவசியத் தேவைகளுக்காக மாநிலங்கள் கூடுதல் ரயில்களைக் கோரும் போதெல்லாம் ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
முழு பட்டியல் இதோ:
ரயில்வே அமைச்சகத்தின் (Railway Ministry) கூற்றுப்படி, ரயில் பயணிகளில் ஒரு புதிய போக்கு காணப்பட்டது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் பணிகளுக்குத் திரும்புகிறார்கள்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்காக நகரங்களை அடைவதில் எந்த சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காக செப்டம்பர் 12 முதல் 80 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்தது.
ALSO READ: தென்னிந்தியாவிலிருந்து டெல்லிக்கு முதல் கிசான் ரயிலை இயக்கியது இந்திய ரயில்வே!