ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்து 9 வயது சிறுவன் பரிதாப பலி!
ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாகப்பட்டினத்தில் வடக்கே சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள ஆந்திர பிரதேச மாநிலம் பாலாஜிபெட்டா அருகில் உள்ள அம்மப்பள்ளி கிராமத்தில் ஜஸ்வானந்த் (வயது 9) என்ற சிறுவன் வசித்து வருகிறான்.
3-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் அருகில் உள்ள பண்ணை வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளான். பண்ணை வீட்டிற்கு அருகே தெரு நாய்கள் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
அந்த வழியாக வந்த சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் சிறுவனை தெருநாய்கள் கடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனை கடித்து குதறிய நாய்களை விரட்டி விட்டு சிறுவனை மீட்டனர். சிகிச்சைக்காக மருத்துவமனக்கு கொண்டும் செல்லும் போது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தெரு நாய்கள் கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கடித்து மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சூடான-பொத்தானைப் பகுதிகளில் மட்டும் மொத்தம் 53,000 தெரு நாய்கள் பிடிகப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம், கேரளாவின் திருவனந்தபுரத்தில் 50 வயதான மீனவர் ஒருவர் தெரு நாய் கடித்து உயிரிழந்தார். அடுத்ததாக ஆண்டிங்கலில் பகுதியில் 75 வயதான நபர் தாக்கப்பட்டார். தெருநாய்கள் கடித்து மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.