புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று மாலை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கம் இன்னும் அதை அறிவிக்கவில்லை மற்றும் அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு வழக்கமாக அளிக்கு விளக்கத்தை புறக்கணித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சிறப்பு அமர்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கூறியதைக் கருத்தில் கொண்டு கூட்டம் குறித்த தக்வல்களை அறிய, அனைத்து தரப்பினரிடமும் ஆர்வம் அதிகம் இருந்தது. அதற்கு முன்னதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார்.


பெண்கள் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, "ஒரே நாடு ஒரே தேர்தல்" மற்றும் நாட்டின் பெயரை மாற்றுவது போன்ற பல விஷயங்கள் தொடர்பாக, அமைச்சரவை ஒப்புதல் அளிக்க கூடும் என்ற ஊகங்கள் இருந்தன.


நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு அமர்வு நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் அதாவது பழைய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது. 75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தின் சாதனைகள், படிப்பினைகள் குறித்து இன்று இரு அவைகளிலும் விவாதிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இறுதி உரை நிகழ்த்துவார் என்று நம்பப்படுகிறது.


மேலும் படிக்க - பழைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் கடைசி உரை... சில முக்கிய அம்சங்கள்!


நாளை அதாவது செப்டம்பர் 19ஆம் தேதி நாடாளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும். இந்த கூட்டத்தொடரில் 4 மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசால் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மசோதாக்களை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தை அரசாங்கம் அழைத்தது மட்டுமல்லாமல், வேறு விதமான மறைமுக அஜண்டாவும் உள்ளது என்று எதிர்க்கட்சி நம்புகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இருப்பினும், இது குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


பழைய நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கடைசியாக உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த வரலாற்று கட்டிடத்திற்கு நாம் அனைவரும் விடை கொடுக்க இருக்கிறோம். சுதந்திரத்திற்கு முன், இந்த மாளிகை  பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கான இடமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது நாடாளுமன்றம் என்ற அடையாளத்தைப் பெற்றது"; “இந்த  நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து விடைபெறுவது ஒரு உணர்ச்சிகரமான தருணம்... பல கசப்பான-இனிப்பான நினைவுகள் அதனுடன் இணைந்துள்ளன. நாங்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் விவாதங்களையும் கண்டிருக்கிறோம், ஆனால் அதே நேரத்தில், 'நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற எண்ணத்தையும் ' நாம் கண்டிருக்கிறோம் என்று பிரதமர் கூறினார்.


மேலும் படிக்க - BJP Mission 2024: பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி உறுதி! இருகட்சிகளும் இணைந்தால் வெற்றி சாத்தியமா?


மேலும் படிக்க | எலி பிடிக்க செலவு இவ்வளவு ஆகுமா? 70 லட்ச ரூபாய் ஓவர்! உண்மை என்னன்னா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ