10 வயது சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு..!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி பிரதேசத்தில் 10 வயது சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட அந்த சிறுமியின் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.


டெல்லி பிரதேசத்தில், ஆசிரியர் தன்னை தகாத வார்த்தைகள் கூறி திட்டியதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்த ஆறு வயது சிறுமியின் குடும்பத்தினர், அந்த ஆசிரியரின் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதை தொடர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் ரித்திக்காவை, கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தனக்கும் அந்த சிறுமியின் தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கோரிக்கை மனு விடுத்திருந்தார் ஆசிரியர் ரித்திக்கா.


அவரின் ஜாமீன் மனுவிற்கு பதிலளித்த நீதிமன்றம், "சிறுவர்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். ஓர் ஆசிரியராக அவர் மேலும் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட சிறுமி, இவரது பெயரை தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், இவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், இந்த வழக்கிற்கு தொடர்பான தடயங்களை அழிக்கும் முயற்சியில் இவர் ஈடுபடலாம். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நீதிமன்றம் இவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறது" என்று அறிவித்துள்ளது.


ஜாமீன் கோரிய ஆசிரியரின் தரப்பில், வழக்கறிஞர்கள் ரஷீத் அசாம், நீலம் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரீத் சிங் ராய் ஆகியோரும் வாதாடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.