போதையில் ஏற்படும் வாகன விபத்தை தடுக்க மதுபானங்களை ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து கொடுக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது மகாராஷ்டிர அரசு...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநில அரசின் கலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில், ''மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு நாங்கள் கொண்டுவரும் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். மக்களின் வீட்டுக்கே மதுவகைகளை டெலிவரி செய்யும் திட்டம் நாட்டிலேயே மகாராஷ்டிரா அரசுதான் முதன் முதலாகக் அமல் படுத்துகிறது.
 
விபத்துக்களைக் குறைக்க வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தை நடமுறைப்படுத்துவதற்கு முக்கியக் காரணம். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்தில் சிக்குகிறார்கள். மதுவகைகள் வீட்டுக்கே வந்தால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குறையத் தொடங்கும். இதன்மூலம் விபத்துக்களை கணிசமாகக் குறைத்திட முடியும்.


காய்கறி, மளிகைபொருட்கள், உணவு என ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வருவதுபோல, மதுவகைகளையும் ஆர்டர் செய்து மக்கள் பெற முடியும். இதற்கு ஆதார் என் அட்டை அவசியமாகும். இதன் மூலம் வாங்குபவர் மற்றும் விற்பவர்களை கண்டறிய முடியும். இதனால் சட்டவிரோத மது விற்பனை தடுக்கப்படும்'' என்று கூறினார்.  இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், நாட்டிலேயே மதுபானத்தை ஹோம் டெலிவிரி செய்யும் முதல் மாநிலம் என்ற பெருமையை மகாராஷ்டிரா பெறும். 


அதே நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருவதால் இதனை நடைமுறைபடுத்துவது குறித்து அம்மாநில அரசு மறு ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.