ராஜஸ்தான் இடைத்தேர்தலில் மொத்தம் 40829 வாக்குகள் பதிவு!!
ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடப்பட்டது.
ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடப்பட்டது.
கடந்த 29ம் தேதி ராஜஸ்தான், மேற்குவங்கம் அகிய மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.ராஜஸ்தானில் உள்ள அல்வார், அஜ்மீர் ஆகிய தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் உள்ள உலுபெரியா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று இந்த இரண்டு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அஜ்மீர் தொகுதி எம்.பி.யாக இருந்த சன்வர்லால் ஜேட் (பாஜக), அல்வர் தொகுதி எம்.பி.யாக இருந்த மஹந்த் சந்த் நாத் யோகி (பாஜக), மண்டல்கர் தொகுதி எம்எல்ஏவான கீர்த்தி குமாரி (பாஜக) ஆகியோர் கடந்த ஆண்டு மரணம் அடைந்தனர், அதையடுத்து, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் மொத்தம் 40829 வாக்குகள் பதிவாகியுள்ளனர். இதில் பி.ஜே.பி. 17625 வாக்குகள் மற்றும் காங்கிரஸ் 8576 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
ஆல்வார் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 30,595 வாக்குகளை பெற்றுள்ளது. அஜ்மீர் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் 7585 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.