ரயிலின் கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்து டீ தயாரித்த விற்பனையாளர்களுக்கு தெற்கு மத்திய ரயில்வே ரூ.,1,00,000 அபாராதம் விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் விற்கப்படும் டீ, காபி வாங்கி குடிப்பார்கள். ரயில்வே டீ, காபி வாங்கி குடிக்கும் போதெல்லாம் இனி இது தான் ஞாபகம் வரும் போல் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில்,


நீல நிற சட்டை அணிந்த ரயில்வே கேன்டீன் ஊழியர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொடுக்கும் டீ, காபி கேன்களில் கழிவறை நீரை கலந்து, கழிவறை வாயிலில் காத்திருந்தவரிடம் ஒவ்வொன்றாக எடுத்து தருகிறார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும் அந்த வீடியோவில் ஏன் டாய்லெட்டில் தண்ணீரை பிடிக்கிறீர்கள் என வீடியோ எடுத்த நபர் கேட்டதற்கு சிரித்துக் கொண்டே அந்த ரயில்வே ஊழியர் சென்று விட்டனர்.


 



 


இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் சென்னை - ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் ஒப்பந்ததாரர் சிவப்பிரசாத் என்பவருக்கு ரூ.,1,00,000 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.