அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கக் கூடாது!!
ஆதார் தொடர்பா விசாரித்த சுப்ரீம் கோர்ட் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கி உள்ளது.
ஆதார் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசு அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
அதே நேரம் வங்கி கணக்கு துவங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை தடை செய்ய முடியாது. ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கி உள்ளது.
பள்ளி சத்துணவு, ஓட்டுனர் உரிமம் பெற, வாகன பதிவு உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட் இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.