உத்தரபிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வரும் போது ஆதார் எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உத்திர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மாநில அரசு சுற்றிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டதாவது:-


10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் போது அனைவரும் ஆதார் எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எனவே பொதுத்தேர்வு வருவதற்கு முன்பே அனைவரும் ஆதார் எண் வாங்கிக்கொள்ள வேண்டும். ஆதார் எண் கொண்டு வருவதன் மூலம் ஆள்மாறாட்டத்தை தடுக்க முடியும். இதனால் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் ஆதார் எண் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனால், மாணவனின் பள்ளி முதல்வர் தான் பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஆதார் கார்டையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.