பான் கார்டு, வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம்!
பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஆதார் எண்ணை பல அடிப்படை உரிமைகளை பெறுவதற்குக் கூட கட்டாயம் ஆக்குவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலை உள்ளது.
தற்போது, பான் கார்டு மற்றும் வருமான வரி தாக்கல் உள்ளிட்டவற்றுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்ற நடைமுறையை பின்பற்ற அனைத்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது அரசு.