உத்தரப்பிரதேச பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என உபி., அரசு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும்போதும், ஆள்மாறாட்டத்தைத் தடுக்க இந்த முதிவு அறிவிக்கபட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


ஏதேனும் ஒரு மாணவன் ஆதார் இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் போனால் அதற்கு அவர் பயிலும் பள்ளியின் முதல்வர்தான் பொறுப்பு என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.