அடுத்த மாதம் முதல் போக்குவரத்து துறையில் ஆதார் எண், பான்கார்டு, செல்போன் எண்  கட்டாயம் ஆகிறது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கார், புதிய இருசக்கர வாகனம் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் செல்போன் எண் போன்ற ஆவணங்களை வழங்கினால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்ய முடியும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


இதைக்குறித்து போக்குவரத்து துறை அதிகாரி சார்பில் கூறியதாவது:-


வாகனங்கள் பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதால் போலி பதிவு வாகனங்கள், விபத்து ஏற்படுத்தி தப்பி செல்லும் வாகனங்கள், சாலைவரி, தரச்சான்று பெறாத வாகனங்கள் போன்றவற்றை எளிதாக கண்டு பிடிக்க முடியும். பல்வேறு தவறுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண இத்திட்டம் உதவியாக இருக்கும் என கூறினார். 


நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் விவரங்களை ஆதார் எண் மூலம் இணைப்பதால் அரசின் உதவிகள் எளிதாக பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.