வாக்கு சேகரிக்க சாக்கடையில் குதித்து சுத்தம் செய்த ஆம்ஆத்மி கவுன்சிலர்! வீடியோ வைரல்
டெல்லியில் ஆம்ஆத்மி கவுன்சிலர் ஒருவர் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஆம்ஆத்மி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தேர்தல் நேரத்தில் பலரும் விதவிதமான செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில், கிழக்கு டெல்லியைச் சேர்ந்த ஆம்ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் என்பவர், அப்பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார். பின்னர் அவரது தொண்டர்கள் ஹசீப்-உல்-ஹசன் மீது பால் ஊற்றி குளிப்பாட்டினர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பாக ஹசீப் கூறுகையில், ‛கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி வழிகிறது என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பாஜகவை சேர்ந்த கவுன்சிலரும், எம்எல்ஏவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தானே இறங்கி வேலை செய்ததாக தெரிவித்தார்.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநகராட்சி தேர்தலை சரியான நேரத்தில் நடத்தி பாஜக வெற்றி பெற்றால் ஆம்ஆத்மி கட்சி அரசியலை விட்டு வெளியேறும் என்ரு கூறி பரபரப்பான பேச்சில் ஈடுபட்டு வரும் இந்நிலையில், தொண்டர்கள் வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஆடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறு மாநகராட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில் உயிரை பணயம் வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களை டெல்லி மக்கள் கடுமையாக இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் இவரது இந்தச் செயல் பலரிடம் நகைச்சுவையைத் ததும்பச்செய்யும் விஷயமாகவே சென்று பதிந்துள்ளதே தவிர, வாக்குகளை பெற்று தரும் சாதனையாக பதியவில்லை என்பதை டுவிட்டரில் இவ்வீடியோ பெற்று வரும் கமெண்டுகளைப் பார்த்துத் தெரிந்துக்கொள்ளலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR