AAP MLA சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்
AIIMS பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சோம்நாத் பாரதி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது.
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி (AAP) எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் பாதுகாவலர் தாக்கப்பட்ட வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக சோம்நத் பாரதி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நீதிமன்றம் அவருக்கு சனிக்கிழமை பிற்பகல் 2 ஆண்டு கால தண்டனை விதித்தது.
ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணைக்கு பின்னர், சோம்நாத் பாரதி குற்றவாளி என சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எய்ம்ஸ் தலைமை பாதுகாப்பு அதிகாரியின் புகாரின் பேரில் செப்டம்பர் 9 ஆம் தேதி சோம்நாத் பாரதி மீது 2016 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இதில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் சோம்நாத் பாரதியின் வீடியோ ஒன்று வைரலாகியது, அதில் அவர் யோகி ஆதித்யநாத்துக்கு (Yogi Adityanath) எதிராகவும் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் குறித்தும் ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ராய் பெரேலியில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில், சில நாட்களுக்கு முன், சோம்நாத் பாரதியின் வீடியோ ஒன்று வைரலாகியது, அதில் அவர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் குறித்தும் ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். ராய் பெரேலியில் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சி (AAP) எம் எல் ஏவான சோம்நாத் பாரதி, மீது ஒரு இளைஞர் மை வீசினார். அவர் மீது மை வீசப்பட்ட உடனே கோபமடைந்த, சோம்நாத் பாரதி ஆதித்யநாத்தை அவமதிக்கும் வகையில் பேசினார். இதையடுத்து சோம்நாத் பாரதியை ராய் பரேலியில் போலீசார் கைது செய்தனர். மை வீசிய சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குள் சோம்நாத் பாரதி கைது செய்யப்பட்டார்.
ALSO READ | லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாரா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe