பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் தில்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவை நேரில் சந்திப்பதற்காக, அவரின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் (Tejaswi Yadav), தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் நேற்று, பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு தனி விமானம் மூலம் சென்றனர்.
பீகார் (Bihar) முதல்வராக இருந்த போது லாலு பிரசாத் யாதவ் (Lalu Prasad Yadav) செய்த கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வழக்கில், அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பல்வெறு உடல்நலக் கோளாறுகள் இருப்பதன் காரணமாக சிறை நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, அவரது நுரையீரலில் அதிக பாதிப்பு இருப்பதால், அவருக்கு தில்லி எய்ம்ஸில் (AIIMS) சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கோரி, அனுமதி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவர்கள் குழு அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கும்.
லாலு பிரசாத் யாதவ் (Lalu Prasad Yadav) அவர்களின் நுரையீரலில் தொற்று இருப்பதாகவும், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளார். அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ALSO READ | கேம்பிரிட்ஜ் அனாலிடிகா Facebook பயனர்களின் தரவுகளை திருடியதாக CBI வழக்குப் பதிவு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR