ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், புது டெல்லி: டெல்லி மதுபான ஊழலில் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றொரு வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குஜராத் பல்கலைக்கழக அவதூறு வழக்கில் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த மனுவில் தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி விவகாரம்


பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தெரிவித்த கருத்துக்கு எதிராக குஜராத் பல்கலைக்கழகம் இந்த அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.சஞ்சய் சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தர விட்டது. அதன்பிறகு கீழமை நீதிமன்றத்தின் சம்மனை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்குக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.


கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்த குஜராத் பல்கலைக்கழகம்


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி மற்றும் பட்டப்படிப்பு குறித்த கேள்விகளை எழுப்பிய போது குஜராத் பல்கலைக்கழகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை வைத்தனர். அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஆம் ஆத்மி தலைவர்கள் மீது குஜராத் பல்கலைக்கழகம் கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்தது. 


மேலும் படிக்க - டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்


நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய கீழமை நீதிமன்றம்


இந்த வழக்கில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு எதிராக குஜராத் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பி அவரை ஆஜராக அழைத்தது. இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தின் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் மேல்முறையீடு செய்திருந்தார். சஞ்சய் சிங்கிற்கு நிவாரணம் வழங்காத குஜராத் உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் சம்மனை உறுதி செய்தது.


சஞ்சய் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்


குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்காததால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆம் ஆத்மி எம்பி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ரெபேக்கா ஜான், "குஜராத் பல்கலைக்கழகம் தொடர்பாக சஞ்சய் சிங் கூறியதில் அவதூறு எதுவும் இல்லை எனக்கூறினார். இது குறித்து, கீழ் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் போது, ​​இந்த வாதங்களை அங்கே தெரிவிக்கலாம் எனக் கூறிய உச்ச நீதிமன்றம் சஞ்சய் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்தது.


ஜாமீனில் வெளியே வந்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்


2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த ஆறு மாதங்களாக சிறையில் இருந்த அவர் ஏப்ரல் 3 (புதன்கிழமை) ஜாமீனில் வெளியே வந்தார்.


மேலும் படிக்க - சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் சிங்.. இனி மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைப்பது சுலபமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ