பிரதமர் மோடி வரும் ஜூன் மாதத்தில் தமது வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என உறுதியாகியுள்ளது. இதன் மூலம் வரும் 30-ஆம் தேதி 2-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்பார் என தகவகள் தெரிவிக்கின்றன. தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் முதலில் கிர்கிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார். 


கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை 44 நாடுகளுக்கு நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார்.


இந்நிலையில் அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர், அடுத்த 6 மாதங்களில் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணம் குறித்த திட்டத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


இந்த பயணத்திட்டத்தின் படி வருகிற ஜூன் 13-ஆம் தேதி முதல்15-ஆம் தேதி வரை அவர் கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார். அங்கு 3 நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். ஜூன் மாதம் 28-ஆம் தேதி ஜப்பான் செல்லும் பிரதமர், அங்கு இரு நாட்கள் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்கிறார். ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் பிரான்சுக்கு செல்லும் பிரதமர், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவுக்கும், 3-வது வாரத்தில் அமெரிக்காவுக்கும் செல்ல உள்ளார்.


இதைத்தொடர்ந்த நவம்பர் 4-ஆம் தேதி தாய்லாந்து நாட்டிற்கும்,11-ஆம் தேதி பிரேசிலுக்கும் மோடி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.