கர்நாடகா மாநிலத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான ஆசிரியர் தகுதி தேர்வு நடந்துவருகிறது. இந்தத் தேர்வானது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு எழுத பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அந்தவகையில் பெண் ஒருவர் தேர்வுக்கான தனது ஹால் டிக்கெட்டை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அந்த ஹால் டிக்கெட்டில் விண்ணப்பித்த பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் கவர்ச்சியான புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் தேர்வர் இதுதொடர்பாக கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தார்.



இதனையடுத்து சைபர் க்ரைம் காவல் துறையில் கல்லூரி முதல்வர் புகாரளித்தார். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து தேர்வு குழுவினரும் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த விசாரணையில், தேர்வு எழுத விண்ணப்பித்த பெண் சிக்கமகளூருவைச் சேர்ந்தவர். அவருக்கு ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்தது. 


மேலும் படிக்க | குஜராத் தேர்தல்: புதியவர்களுக்கு வாய்ப்பு; களத்தில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள்


எனவே தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார். அப்போது அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்துக்கு பதிலாக சன்னி லியோனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.


அதேசமயம், தேர்வு ஆணையம் புகைப்படத்தை சரியாக கவனித்திருக்க வேண்டும். இப்படி அலட்சியமாக ஹால் டிக்கெட்டை வெளியிட்டிருக்கக்கூடாது என பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருகின்றது. தற்போது அந்த ஹால் டிக்கெட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | சாதித்த இந்தியர்! $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த Zoho!


மேலும் படிக்க | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ஒய்.சந்திரசூட்: அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன


மேலும் படிக்க | G20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா... லோகோ, இணையதளத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ