பிரதமரின் 100-ஆவது ‘மனதின் குரல்’ (Mann Ki Bath) உரை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30ம் தேதி) ஒலிபரப்பானது.  பிரதமா் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக கடந்த 2014, அக்டோபா் முதல் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறாா். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷனில் பிரதமரின் உரை
ஒலிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரதமர், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவதுடன், பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயலாற்றும் தனி நபா்களை பாராட்டி, அவா்களுக்கு அங்கீகாரம் வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளாா். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனதின் குரல் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருவதோடு, தமிழின் பெருமை குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயலாற்றும் பலவேறு மக்கள் குறித்தும் பலமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பப்பட்டது.


பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது வார நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையை, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கேட்டு மகிழ்ந்தனர். சென்னை ஆளுநர் மாளிகையில் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை மாணவர்களுடன் ஆளுநர் ஆர்என்.ரவி கேட்டார்.  ஆளுநர் ரவியுடன் பல்துறை முக்கிய பிரமுகர்களும் 100ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டனர்.


100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனிதத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மேம்படும். வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு முன்பு நம் நாட்டில் உள்ள 15 இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். இந்த மனதின் குரல் நிகழ்ச்சி நாம் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


" மனதில் இருந்து ஒரு குரல் நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களான உங்களை நான் விட்டு விலகுவதுமில்லை.. உங்களை பிரிவதும் இல்லை.. உங்கள் கூடவே இருப்பது போன்று தான் எனக்கு இருக்கிறது" என்றார். மேலும், நிகழ்ச்சிக்காக மக்களின் செய்திகள் மற்றும் கடிதங்களைப் படித்து பலமுறை உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். மனதின் குரல் நிகழ்ச்சி கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளின் வெளிப்பாடு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


மேலும் படிக்க |  சைக்கிளில் 20,000 கி.மீ பயணம்.. கை இழந்த இளைஞரின் அசத்தும் செயல்!


'மன் கி பாத்' எனது மனதின் ஆன்மீக பயணமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். மன் கி பாத் என்பது  சமூகத்திற்கான பயணம். 'மன் கி பாத்' என்பது ஆணவத்திலிருந்து விடுபட்டு சுயத்தை நோக்கிய பயணம். இது நான் அல்ல, ஆனால் நாம் என்பதை உணர்த்தும் உணர்ட்சிப் பயணம். இன்றைக்கு எவ்வளவோ கடந்த காலம் கண் முன்னே வந்து கொண்டிருக்கிறது. நாட்டுமக்களின் இந்த முயற்சிகள் என்னை தொடர்ந்து உழைக்க தூண்டியது. நண்பர்களே, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் நாம் குறிப்பிடும் அனைவரும், இந்த நிகழ்ச்சியை உயிர்ப்புடன் உருவாக்கிய நம் ஹீரோக்கள். இன்று, 100வது  நிகழ்ச்சி என்ற மைல் கல்லை எட்டியுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை இந்த ஹீரோக்கள் அனைவரிடமும் சென்று அவர்களின் பயணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். செல்ஃபி வித் டாட்டர் பிரச்சாரம் வாழ்க்கையில் மகளின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல முயற்சிகளின் பலனாக இன்று ஹரியானாவில் பாலின விகிதம் மேம்பட்டுள்ளது. மன் கி பாத்தில் நாட்டின் பெண் சக்தியின் நூற்றுக்கணக்கான எழுச்சியூட்டும் கதைகளை குறிப்பிட்டிருப்பதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.


மேலும் படிக்க | Mann Ki Baat: மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஐநா தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு!


நமது ராணுவமாக இருந்தாலும் சரி, விளையாட்டு உலகமாக இருந்தாலும் சரி, பெண்களின் சாதனைகள் குறித்து நான் பேசும்போதெல்லாம் நிறையவே பாராட்டப்பட்டது. இதுபோன்ற பல பிரச்சாரங்கள் நமது பெண் சக்தியால் நடத்தப்பட்டு, அவர்களின் முயற்சிகளை முன்னுக்குக் கொண்டுவரும் தளமாக 'மன் கி பாத்' மாறியுள்ளது. நண்பர்களே, இப்போது மேலும் ஒரு மனிதர் எங்களுடன் தொலைபேசியில் இருக்கிறார். அவர் பெயர் மன்சூர் அகமது. 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் பென்சில் ஸ்லேட்டுகள் பற்றிப் பேசும்போது மன்சூர் அகமது குறிப்பிடப்பட்டார். நம் நாட்டில் இதுபோன்ற திறமைசாலிகள் பலர் உள்ளனர், அவர்கள் தங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் வெற்றியின் உச்சத்தை எட்டியுள்ளனர். எனக்கு நினைவிருக்கிறது, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட் முரளி பிரசாத் ஒரு தன்னம்பிக்கை இந்தியா விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதிகபட்சமாக இந்திய தயாரிப்புகளை மட்டும் எப்படி பயன்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.


மேலும் படிக்க | குடியரசு தலைவரை சந்திக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்


மேலும் படிக்க | மெரினாவில் பேனா நினைவு சின்னம்! அனுமதி வழங்கியது மத்திய அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ