Aditya L1: L1 என்றால் என்ன? சூரியனை ஆதித்யா எங்கிருந்து ஆராயும்? பதில்கள் இதோ
Aditya L 1 Mission: இந்த மிஷனின் நோக்கம் சூரியனின் தீர்க்கப்படாத அனைத்து மர்மங்களையும் புரிந்துகொள்வதாகும். இதனால் சூரியன் என்னும் மிகப்பெரிய ஆற்றல் மூலத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.
ஆதித்யா எல் 1 மிஷன்: சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு, இப்போது, இந்தியாவின் ஆதித்யா எல் 1 மிஷனுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கான பயணம் மங்கல்யான் என்றும் நிலவுக்கான பயணம் சந்திரயான் என்றும் அழைக்கப்பட்டன. ‘யான்’ என்றால் ‘விமானம்’ என பொருள். அப்படி என்றால், சூரியனை நோக்கிய இந்த மிஷனுக்கு ஆதித்யயான் அல்லது சூர்யயான் என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவது உறுதி. மேலும் ஆதித்யா எல்1 -இல் எல்1 என்பதற்கு என்ன பொருள் என்ற கேள்வியும் எழும். சூரியனை அடைய ஆதித்யா எல்1 கடக்க வேண்டிய தூரம் என்ன? இந்த பதிவில் இந்த அனைத்து கெள்விகளுக்கான விளக்கங்களையும் காணலாம்.
ஆதித்யா எல்1: முக்கிய ஐந்து அம்சங்கள்
- ஆதித்யா (Aditya L1) மிஷனுக்கான லாக்ரேஞ்ச் புள்ளிகள் (Lagrange Point) 1, 2, 3, 4 மற்றும் 5 உள்ளன. ஆனால் ஆதித்யாவுடன் L1 சேர்க்கப்பட்டுள்ளது. உண்மையில், லாக்ரேஞ்ச் சுற்றுப்பாதையில் உள்ள இந்த புள்ளியில் கிரகணத்தின் தாக்கம் மிகக் குறைவு. சூரியனில் கிரகணத்தின் செயல்முறை இயற்கையானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே கிரகணத்தின் விளைவு இல்லாத இடத்தில் ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், L1 புள்ளி மிகவும் சாதகமாக இருந்தது.
- எந்தவொரு கிரகத்தின் சுற்றுப்பாதையைச் சுற்றிலும், புவியீர்ப்பு விசை, விண்வெளி விமானம் மற்றும் சூரியன் மற்றும் கிரகத்தின் செயல்பாடுகள் தகவல்களைப் பெற சிறந்ததாகக் கருதப்படும் சுமார் 5 இடங்கள் இருக்கும். 18 ஆம் நூற்றாண்டில், ஜோசப் லூயிஸ் லாக்ரேஞ்ச் என்ற வானியலாளர் பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் சூரியனின் வெளிப்புற சுற்றுப்பாதையில் ஐந்து புள்ளிகளைக் கண்டுபிடித்தார். இவை லாக்ரேஞ்ச் புள்ளிகள் என்று அறியப்பட்டன.
மேலும் படிக்க | Aditya L1: சூரியனின் ரகசியங்களை அறிய ஒரு பயணம்.. தயார் நிலையில் ஆதித்யா-எல்1!!
- PSLV-C57 ராக்கெட் ஆதித்யாவை பூமியின் கீழ் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பும். கீழ் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு, அது ஓவல் வடிவத்தில் கொண்டு வரப்பட்டு, உந்துவிசை உதவியுடன் L1 புள்ளியை நோக்கி அனுப்பப்படும். பூமியின் ஈர்ப்பு விசைக்கு வெளியே சென்ற பிறகு பயணக் கட்டம் (க்ரூஸ் ஃபேஸ்) தொடங்கும். அதன் பின்னர் அது L1 -க்கு அருகிலுள்ள ஹலோ ஆர்பிட்டில் வைக்கப்படும். இந்த முழு செயல்முறையும் நடக்க சுமார் 127 நாட்கள் அதாவது நான்கு மாதங்கள் ஆகும்.
- ஆய்வகத்தில் துல்லியமான தகவல்களைப் பெற முடியாது என்று சூரியன் பற்றிய ஆய்வு பற்றி கூறப்படுகிறது. பூமியில் வாழ்வதற்கு சூரிய சக்தியின் முக்கியத்துவம் பற்றி அனைவருக்கும் தெரியும். சூரியனில் பல வகையான இரசாயன ரியாக்ஷன்கள் நடைபெறுகின்றன, அதன் விளைவு பூமியில் விழுகிறது. சூரியன் வரம்பற்ற ஆற்றலை வழங்குகிறது, எனவே எதிர்காலத்தில் இது தொடர்பான ஏதேனும் சம்பவம் நடந்தால், அதற்கு முன் செய்யப்படும் ஆய்வு எதிர்கால சூழ்நிலைகளின் பகுப்பாய்வில் முக்கியமான தகவல்களை வழங்க முடியும்.
- ஆதித்யா எல்1 மிஷனின் பட்ஜெட் சுமார் 423 கோடி ரூபாய் ஆகும். இது பிஎஸ்எல்வி-சி57 மூலம் ஏவப்பட உள்ளது. குரோமோஸ்பியர், கரோனா, பிளாஸ்மா இயற்பியல், சோல் ஃப்ளேர்ஸ் ஆகியவற்றைப் படிப்பதே இதன் நோக்கம். இது தவிர, கரோனல் லூப் மற்றும் கரோனல் வெப்பநிலை, அடர்த்தி மற்றும் வேகம் பற்றிய தகவல்களும் இதன் மூலம் கிடைக்கும். இதனுடன், காந்தப்புலம், இடவியல், கட்டமைப்பு மற்றும் அதன் தோற்றம் பற்றிய தகவல்கள் கொரோனாவில் பெறப்படும்.
பூமியிலிருந்து L1 புள்ளியின் தூரம் 1.5 மில்லியன் கி.மீ.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 151 லட்சம் கி.மீ ஆகும். ஆதித்யா 151 லட்சம் கிலோமீட்டருக்குப் பதிலாக 15 லட்சம் கிலோமீட்டரை மட்டுமே கடக்க வேண்டும். ஆதித்யா மொத்த தூரத்தில் ஒரு சதவீதத்தை மட்டுமே கடக்க வேண்டும் என்று இதை கற்பனை செய்து கொள்ளலாம். ஆதித்யா சூரியனின் சுற்றுப்பாதையின் L1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதாவது ஆதித்யா L1 சுற்றுப்பாதையில் இருந்து சூரியனை ஆய்வு செய்யும். L என்றால் Lagrange Point என்று அர்த்தம். L 1, L 2, L 3, L 4 மற்றும் L 5 என மொத்தம் ஐந்து புள்ளிகள் உள்ளன. இந்த மிஷனின் நோக்கம் சூரியனின் தீர்க்கப்படாத அனைத்து மர்மங்களையும் புரிந்துகொள்வதாகும். இதனால் சூரியன் என்னும் மிகப்பெரிய ஆற்றல் மூலத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.
மேலும் படிக்க | சூர்யா மிஷன்: எந்த ராகசித்தை இஸ்ரோ அறிய ADITYA-L1 மிஷன்? இதோ விடை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ