மிஷன் ஆதித்யா எல்1: சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் புதிய பணிக்கான ஆயத்தப் பணிகளை முடித்துள்ளது. சந்திரயான் பயணம் வெற்றி பெற்ற பிறகு, சூரியனை ஆய்வு செய்யும் நான்காவது நாடாக இந்தியா மாறும். முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சூரியன் தொடர்பான ஆய்வுப்பணிகளை மெற்கொண்டுள்ளன. இஸ்ரோவின் சூரியனுக்கான ஆய்வு மிஷன் ஆதித்யா எல் 1 அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் நிலேஷ் எம். தேசாய், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ஆதித்யா எல்-1 பற்றிய தகவலை அளித்துள்ளார். "நாங்கள் அடுத்ததாக ஆதித்யா-எல்1 மிஷன் திட்டமிட்டுள்ளோம், அது தயாராக உள்ளது. இது செப்டம்பர் 2 ஆம் தேதி ஏவப்படும்" என்று அவர் கூறினார்.
பிரிக்ஸ் மாநாடு மற்றும் கிரீஸ் நாட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை இந்தியா திரும்பினார். இந்தியா வந்த பிறகு முதலில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு உரையாற்றினார். பிரதமரின் பேச்சு குறித்து நிலேஷ் எம். தேசாய், 'பிரதமர் மோடியின் பேச்சு மிகவும் உத்வேகம் அளித்தது. மாண்புமிகு பிரதமரின் அறிவிப்புகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்தன. ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அவர் அறிவித்தார். இது எங்களைப் போன்ற விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய விஷயம். சந்திரயான் - 3 லேண்டர் தரையிறங்கிய இடம் "சிவ சக்தி" பாயிண்டாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகள், விண்வெளித் துறையில் நாட்டிற்காக உழைக்க நம்மையே அர்ப்பணித்துக் கொள்ள நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்துள்ளன.' என தெரிவித்தார்.
ஆதித்யா எல்-1 மிஷன்
ஆதித்யா எல்-1 மிஷனின் பணியின் குறிக்கோள் சூரியனின் குரோமோஸ்பியர் மற்றும் கொரோனாவின் இயக்கவியல், சூரியனின் வெப்பநிலை, கொரோனல் மாஸ் வெளியேற்றம், கொரோனாவின் வெப்பநிலை, விண்வெளி வானிலை மற்றும் பல அறிவியல் அம்சங்களைப் படிப்பதாகும் என இஸ்ரோ கூறியுள்ளது.
மிஷன் 'சூர்யா' ஏன் அவசியம்?
சூரியனின் மேற்பரப்பில் ஒரு மிகப்பெரிய, மிக அதிக வெப்பநிலை உள்ளது. அதன் மேற்பரப்பில் இருக்கும் பிளாஸ்மா வெடிப்புகள் வெப்பநிலைக்கு காரணம். பிளாஸ்மாவின் வெடிப்பு காரணமாக, மில்லியன் கணக்கான டன் பிளாஸ்மா விண்வெளியில் பரவுகிறது. இது கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) என்று அழைக்கப்படுகிறது. இது ஒளியின் வேகத்தில் பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. பல நேரங்களில் CME பூமியை நோக்கி வரும், ஆனால் பொதுவாக பூமியின் காந்தப்புலத்தால் பூமியை அடையாது. ஆனால் பல முறை CME பூமியின் வெளிப்புற அடுக்கை ஊடுருவி பூமியின் வளிமண்டலத்தில் ஊடுருவுகிறது.
சூரியனின் கரோனல் மாஸ் எஜெக்ஷன் பூமியை நோக்கி வரும்போது, பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. பூமியிலும், குறுகிய இணைய தொடர்பு தடைபடுகின்றது. இதனை ஒட்டிய பணிகளை செய்ய மிஷன் ஆதித்யா எல்-1 சூரியனுக்கு அருகில் அனுப்பப்படுகிறது. சூரியனில் இருந்து வரும் கரோனல் மாஸ் எஜக்ஷன் மற்றும் அதன் தீவிரத்தை சரியான நேரத்தில் மதிப்பிடுவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. இதனுடன், பல வித ஆராய்ச்சியிப் பணிகளின் பார்வையில் இருந்தும் இந்த பணித்திட்டம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
ஆதித்யா எல்-1 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 இல் நிலைநிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பூமியிலிருந்து அதன் தூரம் 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும்.
மேலும் படிக்க | நிலவை அடுத்து சூரியனுக்கு செல்ல திட்டம்..! கெத்து காட்டும் இந்தியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ