Aditya L1: சூரிய பயணத்தில் இந்தியா சாதனை... இலக்கை அடைந்த ஆதித்யா - முழு விவரம்!
Aditya L1 Reached Destination: சூரியனை நோக்கிய விண்வெளி ஆய்வு பயணத்தில் இந்தியாவின் இஸ்ரோவால் செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலம் அதன் இலக்கை இன்று அடைந்தது.
Aditya L1 Reached Destination: இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான Aditya L1 (ஆதித்யா-எல்1) விண்கலம் இன்று (ஜன. 6) ஹாலோ ஆர்பிட்டின் எல்1 (Halo Orbit's L1 Point) என்ற அதன் இலக்கை அடைந்து ஒரு பெரிய மைல்கல்லை எட்டியது. ஆதித்யா-எல்1 விண்கலத்தை எல்1 புள்ளியைச் சுற்றி ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கான இறுதிச் செயல்பாடுகளை இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்படுத்தியது. மேலும், இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவரின் X பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் மோடி (PM Modi) தனது பதிவில்,"இந்தியா மற்றொருமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலம் ஆதித்யா-எல்1 இலக்கை அடைந்தது. மிகவும் கடினமான மற்றும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து நானும் பாராட்டுகிறேன். தொடர்ந்து, மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளை தொடருவோம்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C-58 ராக்கெட்
L1 புள்ளி என்றால் என்ன?
சூரியன்-பூமி அமைப்பின் L1 புள்ளி என்பது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மொத்த தூரத்தில் ஒரு சதவீதம் ஆகும். L1 புள்ளியைச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள் சூரியனை எந்த மறைவுகள்/கிரகணங்கள் இல்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். இது சூரிய செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் சூரியனின் தாக்கத்தை உடனுக்குடன் கவனிப்பதில் அதிக நன்மையை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு செப். 2ஆம் தேதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் (SDSC) இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து துருவ செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (PSLV-C57), ஆதித்யா-எல்1 விண்கலனுடன் விண்ணில் பாய்ந்தது. 63 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் பறக்கும் நேரத்திற்குப் பிறகு, அது பூமியைச் சுற்றி 235x19500 கி.மீ., நீளமுள்ள நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
7 பேலோடுகள்
விண்கலம் அதன் பிறகு தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு உட்பட்டது மற்றும் பூமியின் கோளத்தில் இருந்து விலகி சூரியன்-பூமி அமைப்பின் L1 புள்ளியை நோக்கி சென்றது. மின்காந்த மற்றும் துகள் மற்றும் காந்தப்புல டிடெக்டர்களை (Detector) பயன்படுத்தி ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் கொரோனா என்றழைக்கப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து சென்றது.
சிறப்பு நிலையான L1 புள்ளியை பயன்படுத்தி, நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கின்றன, மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ரேஞ்ச் புள்ளி L1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்கின்றன, இதனால் கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளை மேற்கொள்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனை..! முதன்முறையாக பதிவான சூரியனின் முழு படம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ