கண்ணூர்: ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் புதிய வழக்குகள் ஏற்பட்டுள்ளதால் 250க்கும் மேற்பட்ட பன்றிகளைக் கொல்ல  கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், 'ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்' பரவாமல் தடுக்க, கனிச்சார் பஞ்சாயத்தில், 250க்கும் மேற்பட்ட பன்றிகள் செவ்வாய்க்கிழமை முதல் வெட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக 300 பன்றிகளை கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டு பண்ணைகளில் உள்ள 237 பன்றிகளைக் கொல்ல திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பண்ணைகளில் ஒன்று 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்' மையமாக உள்ளது என்பதும், மற்றொன்று அதன் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது என்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்


இந்த இரண்டு பண்ணைகளைத் தவிர, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள பன்றி பண்ணைகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, வயநாடு மாவட்டத்தில் 'ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்' தொற்று வழக்குகள் பதிவாகியதை அடுத்து, 300க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் 


வயநாடு மற்றும் கண்ணூரில் தலா ஒரு 'ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்' பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  குரங்கம்மை நோயால் ஏற்கனவே சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 'ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல்' புதிய வழக்குகள் வருவதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு கூட்டமும் நடத்தப்பட்டது.


நோய் தடுப்புக் குழுக்கள் அமைக்க அனைத்துத் துறைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளதாக, அதிகாரிகளின் கூட்டத்திற்கு பின்னர், வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கேரளாவில் தக்காளி காய்ச்சல் பீதி; உங்கள் குழந்தைகளை காக்க சில டிப்ஸ் 


மேலும், நோய் பரவல் தடுப்பு முயற்சிகளில் ஒன்றாக, ஆகஸ்ட் 1 முதல் 30 நாட்களுக்கு கேரளா அல்லது கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கும், தென் மாநிலத்திற்கும் பன்றிகள், அவற்றின் இறைச்சி அல்லது தொடர்புடைய பொருட்கள் மற்றும் மலம் இறக்குமதி-ஏற்றுமதி செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பார்கள். வயநாட்டில் உள்ள நெனேமணி கிராமத்தில் இந்த நோயின் புதிய வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.


நோய் பரவாமல் தடுக்க சுல்தான் பத்தேரியின் நெனேமணி பண்ணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வாரம் 193 பன்றிகளை கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக வயநாட்டில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


வயநாட்டில் 222 பண்ணைகளில் 20,000க்கும் மேற்பட்ட பன்றிகள் இருப்பதாக கூறும் கால்நடை பராமரிப்புத் துறையினர், அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ