Breaking: முதல்வர் பதவியை துறந்தார் தேவேந்திர பட்னாவிஸ்...
மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ள நிலையில்., தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ள நிலையில்., தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில் ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, நாளை பாஜக தலைமையிலான அரசு பெரும்பான்மையினை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், தற்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனிடையே NCP-காங்கிரஸ்-சிவசேனா MLA-க்களுடன் சந்திப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான உச்சநீதிமன்ற முடிவு காலை வெளியாகியுள்ள நிலையில் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பதற்றம் ஒட்டிக்கொண்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் சரத் பவார் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இந்த நேரத்தில், ஷரத் பவார் தனது மருமகன் அஜித்தை மன்னித்து மீண்டும் திரும்பி வரும்படி கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பினை அடுத்து அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத்தொடர்ந்து பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதினை உறுதி செய்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....
நடந்து முடிந்த தேர்தலில் பாஜக- சிவசேனா பெரும்பான்மையினை நிரூபித்தது. எனினும் சிவசேனா-வின் பேரம் பேச்சுதல் காரணமாக மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.
தேர்தலுக்கு முன்பு சிவசேனாவுடன் முதல்வர் பதவி சுழற்சி குறித்து ஒப்பந்தம் ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. சிவசேனாவின் பதவி பசி அவர்களை காங்கிரஸுடன் கைகோர்க்க வைத்துள்ளது.
சிவசேனா தற்போது பிறிந்து சென்றாலும் மாநிலத்தில் பாஜக தனி பெரும் கட்சியாக தனித்து நிற்கும். எதிர்கட்சியாக அமர்ந்து மக்களின் குரலாக பாஜக இனி செயல்படும்.
தொடர்ந்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அமையும் ஆட்சி குறித்து விமர்சித்த பட்னாவிஸ், மூன்று சங்கர வாகனம் நிலைத்து, நீடித்து ஓடாது என குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களுடனான சந்திப்பினை அடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் தனது ராஜினாமா கடிதத்தினை ஆளுநரிடன் சமர்பிக்க ராஜ்பவன் சென்றார்.