சமீபத்தில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்றவர்கள் யார் என்கிற செய்தியை விட விறுவிறுப்பாக பரவிய செய்தி விழா மேடையில் நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்த செய்தி தான்.  வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலையை பற்றி கேலி செய்ததால் கிரிஸ் ராக்கை மேடையேறி சென்று வில் ஸ்மித் அறைந்தார்.  கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்தது.  அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே நடிகர் வில் ஸ்மித்திற்கு கிங் ரிச்சர்ட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.  இந்த செய்திகள் இணையத்தில் தீயாய் பரவ வில் ஸ்மித் செய்தது சரி என்று ஒரு கும்பலும், அவர் செய்தது தவறு என்று ஒரு கும்பலும் மாறி மாறி கருத்து தெரிவித்து வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | எப்படி இருக்கிறது Marvel-ன் Morbius திரைப்படம்? - திரைவிமர்சனம்!


தான் செய்தது தவறு என்று வில் ஸ்மித் மன்னிப்பு கோரியும் சிலர் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனையடுத்து திடீரென்று வில் ஸ்மித் அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.  மேலும் எனது செயலால் கிறிஸ் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பலரும் வேதனை அடைந்துள்ளனர் என்றும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.  தற்போது நொடிப்பொழுதில் இவர் தன்னிலை மறந்து செய்த செயலால் இவரது கேரியருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஸ்மித் நடிப்பில் உருவாகும் நெட்ப்ளிக்சின் படமான 'ஃபாஸ்ட் அண்ட் லூஸ்'  படத்தின் பணிகளில் சில தடை ஏற்பட்டுள்ளது.  ஒரு தாக்குதலுக்கு பிறகு கொள்ளைக்கூட்ட தலைவனுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு விடுகிறது, அதன்பிறகு அவன் வாழ்வில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இப்படம் கதைக்களமாக கொண்டுள்ளது.  ஏற்கனவே இப்படத்தில் முதலில் இருந்த இயக்குனர் விலகினார், தற்போது வில் ஸ்மித் செய்த செயலால் இப்படத்தின் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  அதனைத்தொடர்ந்து வில் ஸ்மித்திற்கு பேட் பாய்ஸ்-4 க்கான 40 பக்கம் கொண்ட ஸ்க்ரிப்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அப்படத்தின் பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  பல தரப்பிலிருந்தும் நன்மதிப்பை பெற்றிருந்த இவரது பெயர் தற்போது மிகவும் மோசமானதாக மாறியுள்ளது.


மேலும் படிக்க | அடிச்சது தப்புதான், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR