இந்தியாவில், ஆக்ஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற பூமி பூஜையை அனைத்து தரப்பினரும் சந்தோஷமாக வரவேற்று அதை கொண்டாடினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்தியாவில் நல்லிணக்கம் நிலவுவதை விரும்பாத பாகிஸ்தான், ராமர் கோவில் பூமி பூஜையை வைத்து, வகுப்புவாத கலவரத்தை தூண்ட சதி மேற்கொண்டது.



இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கும் நடவடிக்கையில், பாகிஸ்தான் உளவுத்துறை ISI ஈடுபட்டது அமபமாகியுள்ளது. ஏனெனில் லக்னோவில் கலவரத்தைத் தூண்டுவது பற்றி பேசிய VOIP (வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்) அழைப்பு, இதனை தெளிவாக உணர்த்துகிறது.


ALSO READ | பலூன் போல பெருத்துக் கொண்டே போகும் வயிறு; மர்மமான நோய்.. அவதிப்படும் பெண்..
https://zeenews.india.com/tamil/world/a-woman-from-china-has-a-strange-disease-and-her-stomach-kept-getting-bigger-340327


துபாய் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எண்கள் மூலம் அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. அதில் மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டும் பேச்சைக் கேட்க முடியும். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன், இந்த விவகாரத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


லக்னோவில் மட்டுமல்ல, டெல்லியில் உள்ளவர்களுக்கும் சர்வதேச எண்ணிக்கையிலிருந்து இதுபோன்ற கலவரத்தை தூண்டும் அழைப்புகள் வந்துள்ளன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, தேசத்துரோகம், சதி, நாட்டின் அமைதியான சூழ்நிலையை கெடுப்பது போன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.


ALSO READ | அடுத்த அமெரிக்க அதிபர் யார்... 2016-ல் ட்ரம்ப் வருவார் என கணித்தவர் கருத்து என்ன...!!!


இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர், சுமார் 12 தொலைபேசி எண்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் ஆராயப்பட்டு வருகிறது. பதிவுசெய்யப்பட்ட ஆடியோ செய்திகள், விஐபி எண்கள் மூலம் பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் எல்லா அழைப்புகளிலும் குரல் ஒத்திருக்கிறது.


அழைப்பின் பதிவில், ஒரு நபர் ராமர் கோவில் பற்றி பேசுவதையும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று செங்கோட்டை திட்டத்தை சீர்குலைப்பதை பற்றி பேசுகிறார்.


ALSO READ | ஆர்டிக் வெப்பம்: கனடாவில் 4000 ஆண்டு பழமையான கடைசி பனிக்கட்டி தொடரும் உடைந்தது!!!


ஆனால், ISI, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இது முதல் தடவையல்ல. பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில், ராமர் பூமி பூஜனை செய்த நாளில்  பாகிஸ்தான உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்தது.