அயோத்யா: ராமர் ஜன்மபூமி (Ram Mandir) மற்றும் ஹனுமன்காரியை (Hanumangarhi) பார்வையிட்ட நாட்டின் முதல் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஆவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தகவல் உத்தரப்பிரதேச அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை, பிரதமர் மோடி அயோத்தியில் பிரமாண்டமான மற்றும் தெய்வீக ராமர் கோயில் கட்டுவதற்கும் பூமி பூஜையை நிகழ்த்தினார்.


 


ALSO READ | Ram Mandir: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி ...


ஹனுமன்கரிக்கு வந்த முதல் பிரதமர் PM Modi என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமர் ஜன்மபூமியைப் பார்வையிட்ட முதல் பிரதமரும் ஆவார். அந்த அறிக்கையின்படி, கோயிலின் பிரமாண்டமான துவக்கத்தில் கலந்து கொள்ளும் பாக்கியமும் பிரதமர் மோடிக்கு கிடைத்தது.


பிரதமர் நரேந்திர மோடி 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, அடிக்கல் நாட்டினார். குழந்தை ராமரை தரையில் விழுந்து வணங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. குழந்தை ராமர் கோயிலில் பாரிஜாத மலர்ச்செடியை நாட்டினார் பிரதமர் மோடி. இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோயில் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.


 


ALSO READ | அயோத்தி: பாஜகவின் மற்றொரு பெரிய வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றம்