காஷ்மீர்: 7 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு
காஷ்மீரில் ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பிறகு இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பிறகு இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில், சீருடை அணிந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிரகாசமான சூரிய ஒளிக்கு மத்தியில் பள்ளிக்குச் செல்ல மீண்டும் தொடங்கினர். ஏழு மாதங்கள் வீட்டில் தங்கிய பின்னர், மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருந்தனர்.
"நான் என் வகுப்பு தோழர்களைப் பார்க்க விரும்புகிறேன்" என்று அயன் பர்ரே என்ற மாணவர், புச்ச்போராவில் நகரின் புறநகரில் தனது பள்ளி பேருந்துக்காக காத்திருந்தபோது கூறினார்.
காஷ்மீரில் 370வது பிரிவின் கீழ் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர்ந்து 7 மாதங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், பள்ளிகளைத் திறக்க மாநில நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. பாதுகாப்பு காரணங்களுக்காகக் குழந்தைகளை அனுப்பப் பெற்றோர் முன்வராததால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
இந்நிலையில் மூன்று மாதம் குளிர்கால விடுமுறை உட்பட மொத்தம் எழு மாதங்கள் விடுப்பு அளிக்கப்பட்டு பள்ளிகள், இன்று முதல் மீண்டும் செயல்படு தொடங்கியுள்ளன.