ராகுல் காந்திக்கு பிறகு, 5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்ட ர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது.
ராகுல் காந்தியின் (Rahul Gandhi) ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்ட ர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அஜய் மாக்கேன், காங்கிரஸ் மக்களவை கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் அஸ்ஸாம் பிரிவு பொறுப்பாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் காங்கிரஸ் மகளிரணி தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) மற்றும் ட்விட்டர் (Twitter) தலைவர் ஜாக் டோர்சே (Jack Dorsey ) ஆகியோர் இந்த ட்விட்டர் முடக்க நடவடிக்கைக்கு காரணம் என்று கட்சியில் தகவல் தொடர்பு துறைக்கு பொறுப்பு வகிக்கும் AICC செயலர் குற்றம் சாட்டினார். "காங்கிரஸ் தனது கடும் கண்டணத்தை பதிவு செய்தவதோடு, தனது கட்சிக்கும் எதிரான நடவடிக்கைக்களை எதிர்த்து போராடும் என்று உறுதியளிக்கிறது" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நெருக்குதல் காரணமாகத் தான் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்க ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. முன்னதாக, டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒன்பது வயது சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்தும், அந்த புகைப்படங்களை ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டிருந்தார்.
இதனை தானாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (The National Commission for Protection of Child Rights - NCPCR), இந்த செயல், பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையை மீறுவதாகும் என புகார் அளித்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் கண்க்கை தற்காலிமாக முடக்க ட்விட்டர் நிறுவனம் உத்தரவிட்டது.
Also Read | பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்: நீதிபதி வருத்தம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR