காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் தற்காலிகமாக முடக்கியது. சிறிது நாட்களுக்கு முன் டெல்லியில் 9 வயதான தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி சிறுமியின் தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கடந்த தனது ட்விட்டரில் வெளியிட்டார்.
போக்சோ சட்டப்படி பாலியல் வன்புணர்வுக்கு ஆளான குடும்பத்தினர் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் வெளியிட்ட தடை உள்ளது. இதனை அடுத்து ராகுல்காந்தி விதிகளை மீறி விட்டார் என்று தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது.
அதன்பின் ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால் ராகுல் காந்தியின் அந்த பதிவை நீக்கி கணக்கையும் முடக்கியது ட்விட்டர் நிறுவனம். சமூக ஆர்வலர் ஒருவரால் ராகுல் காந்தி மீதும் ட்விட்டர் நிறுவனம் மீதும் நீதிமன்றத்திலும் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது.
Also Read | எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் கண்ணீர் மல்கிய அவைத்தலைவர் வெங்கையா நாயுடு
இந்த வழக்கில் பதில் அளித்த ட்விட்டர் நிறுவனம், ராகுல் காந்தியின் அந்த குறிப்பிட்ட பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டு அவரது கணக்கும் லாக் செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் எங்களை எதிர் தரப்பாக சேர்த்து இருக்கக் கூடாது என்று தங்கள் பக்கம் உள்ள வாதத்தினை முன்வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், நீங்கள் வேகமாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், சிறப்பு என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர், ட்விட்டர் நிறுவனம் தனது செயல்பாட்டை அதிகாரபூர்வமாக பிரமாண பாத்திரம் தாக்கல் செய்து, தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Also Read | பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்: நீதிபதி வருத்தம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR