மத்திய பிரதேஷில் மீண்டும் ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் தலை எடுக்க ஆரம்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ANI தகவல்களின்படி, மத்திய பிரதேஷின் தேவாஸ் கன்னொட் பகுதியில் உள்ள ATM(SBI வங்கி) ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது.


ATM-ல் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. 


இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், இரவு நேரத்தில் யாரும் இல்லா சமயத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர் என தெரிவித்தனர்.



எனினும் மக்களின் அச்சம் நீங்கவில்லை, காரணம் இச்சம்பவம் கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக நடைப்பெரும் மூன்றாவது ஏடிஎம் கொள்ளை சம்பவம் ஆகும்.


விரைவில் இக்கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாய் உள்ளது.