கடந்த 10 ஆண்டுகளை விட அதிக மழை; இன்று முதல் மீண்டும் டெல்லியில் குளிர் அலை
டெல்லியில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் மீண்டும் வெப்பநிலையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை சூழ்ந்துள்ள பிராந்தியங்களில் மீண்டும் குளிர் அலை ஏற்பட உள்ளது.
புது டெல்லி: ஜனவரி மாதத்தில் டெல்லியில் (Delhi) மொத்தம் 34.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இது கடந்த பத்து ஆண்டுகளில் பெய்த மழைகளில் மிக அதிகமாகும். கடந்த வியாழக்கிழமை சஃப்தர்ஜங் பகுதியில் 17.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தேசிய தலைநகரம் அதன் மாத சராசரியை 19.1 மிமீ தாண்டிவிட்டது என்று ஸ்கைமெட் வானிலை முன்னறிவிப்பு (Skymet Weather Forecast) தெரிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தேசிய தலைநகரம் முழுவதும் மூடுபனியால் சூழப்பட்டிருந்தது மற்றும் ஒட்டுமொத்த காற்றின் தரம் (Air Quality) மிகவும் மோசமான பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. ஏனெனில் லேசான மழை டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் பெய்தது.
சென்டர் நடத்தும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (SAFAR) படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் 266 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல குறைந்தபட்ச வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸிஸ் ஆக பதிவாகியுள்ளது.
ஜனவரி 18 ஆம் தேதி வெப்பநிலையின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. இது டெல்லி மற்றும் அருகிலுள்ள பிராந்தியங்களில் மீண்டும் குளிர் அலை நிலையை கொண்டு வரும். ஜனவரி 16 ஆம் தேதி 11 டிகிரி செல்சியஸில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை, ஜனவரி 17 ஆம் தேதி ஆறு டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.
பனிமூட்டமான வானிலை காரணமாக ரயில்வே சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) கிட்டத்தட்ட டெல்லி செல்லும் 19 ரயில்கள் தாமதமாகின.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.