Agneepath Scheme Protest: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 3வது நாளாக போராட்டம் - ரயில்களுக்கு தீ வைப்பு
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான 3வது நாளாக வட மாநிலங்களில் போராட்டம் தொடரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு புதியதாக அக்னிபாத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ராணுவத்தில் ஆட்களை சேர்க்கும் மத்திய அரசின் நான்கு ஆண்டு திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 17.5 வயது முதல் 21 வயது வரை ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாக கண்டித்துள்ள வட மாநிலத்தினர், இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்காததால் வட மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 3வது நாளாக போராட்டம் தொடர்கிறது. ஏற்கனவே சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். பீகாரில் மட்டும் பல ரயில் நிலையங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
பக்சர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டு தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். மொஹியுதி நகர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில், ரயில் முழுவதும் எரிந்து தீக்கரையானது.
ஜம்மு தாவி எக்ஸ்பிரஸூக்கும் தீவைக்கப்பட்டது. இதனால், பீகார் முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேசத்திலும் ரயில் சேவை மற்றும் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நடைபெறும் வீரியமான போராட்டத்தால் ரயில்வே முன்கூட்டியே ரயில் சேவையை நிறுத்தியுள்ளது. இருப்பினும், ரயில் நிலையங்களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், ரயில்களுக்கு தீவைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்தியப்பிரதேசத்திலும் போராட்டம் வெடித்துள்ளது.
தென் மாநிலங்களில் முதலாவதாக தெலங்கானாவில் போராட்டம் வெடித்துள்ளது. செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு நின்று கொண்டிருந்த ரயில்களுக்கு தீ வைத்ததுடன் ரயில் நிலையங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அம்மாநிலத்திலும் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, போராடத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR