முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு : போலீசார் தாக்கியதாக காங். குற்றச்சாட்டு

P.Chidambaram : ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற  பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Jun 14, 2022, 09:05 AM IST
  • ராகுல் காந்திக்கு ஆதரவாக டெல்லியில் பேரணி
  • முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு
  • போலீசார் தாக்கியதால் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு : போலீசார் தாக்கியதாக காங். குற்றச்சாட்டு title=

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரனைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, ராகுல்காந்தி நேற்று அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் நேரில் ஆஜரானார். முன்னதாக, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவர் தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். ராகுலுக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் ராகுலுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், திக் விஜய் சிங், ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், கவுரவ் கோகோய், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க | நேஷனல் ஹெரால்டு வழக்கின் முழுப் பின்னணி

அப்போது பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டள்ளது. ப.சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதாலேயே அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, தொடர்பாக ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உங்கள் மீது பளு வாய்ந்த மூன்று போலீஸ்காரர்கள் மோதிச் சென்ற பின்னும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்படாமல் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டகாரர்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | நேஷனல் ஹெரால்டு : தொண்டர்களுடன் பேரணியாக வந்து விசாரணைக்கு ஆஜரான ராகுல்காந்தி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News