ஒடிசா மாநிலம் கடல் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் Agni-I (A) ஏவுகணையை செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் Agni-I (A)  ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை 700 கிமீ தொலைவில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கியது. 


15 மீட்டர் உயரமும், 12 டன் எடையும் கொண்ட இந்த குறைந்த தூர இலக்கை தாக்கும் ஏவுகணை சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கவல்லது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் சிறப்பான வழிகாட்டுதல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்த சோதனையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது.