குஜராத் போலீசார் அஹமதாபாத்தில் தற்கொலை செய்துகொண்ட குணால் திரிவேதி குடும்பம், தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன் கடந்த 24 மணி நேரமாக போன் அழைப்பை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த சிலர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். கதவை திறந்து உள்ளே நுழைந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தான் வசித்து வந்த அவனி ஸ்கை அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் திரிவேதி தூக்கில் தொங்கிக் கொண்டு இருக்கிறார். அவரது மனைவி தரையிலும், மகள் படிக்கையிலும் இறந்த நிலையில் கிடந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், குணால் திரிவேதி தன் மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, பின்னர் தூக்கு மாற்றி தற்கொலை செய்துக்கொண்டார் எனக் கூறினார். 


இந்த தற்கொலைக்கு பில்லி-சூனியம் காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. எனினும், இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரி பேச தயாராக இல்லை.


தற்கொலை செய்துக்கொண்ட குணால் திரிவேதி(வயது 45) ஒரு தொழிலதிபர் ஆவார். இவரது மனைவி பெயர் கவிதா (வயது 45) மற்றும் மகள் பெயர் ஸ்ரீன் (வயது 16) ஆகும்.