சந்தோஷத்தை பணம் கொடுத்தும் வாங்கலாம்... ஹேப்பியாக இருக்க நறுக் டிப்ஸ் இதோ!

Lifestyle News In Tamil: பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் என்ன சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா... ஆம், நிச்சயம் வாங்கலாம். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 6, 2024, 02:19 PM IST
  • வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது.
  • அனுபவத்தை பெறுவதுதான் வாழ்க்கை.
  • அந்த வாழ்க்கையில் பணமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
சந்தோஷத்தை பணம் கொடுத்தும் வாங்கலாம்... ஹேப்பியாக இருக்க நறுக் டிப்ஸ் இதோ! title=

Lifestyle News In Tamil: நமது வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று ஒரு நிமிடம் யோசித்தோம் என்றால், ரஜினி சொன்னது போல் ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும். எனவே அந்தளவிற்கு யோசிப்பதற்கு பதில் இந்த பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே நமது ஒவ்வொரு நொடியும் முக்கியமானது தான். இந்த வாழ்வின் அற்புத கணங்களை ரசிப்பதே முக்கியம் எனலாம். 

நீங்கள் பணமில்லாமல் பட்டினியோடு இருப்பவர் என்றாலும், என்றாவது ஒருநாள் உங்களுக்கு கிடைக்கும் அந்த ஒருவேளை சாப்பாடு கொடுக்கும் அனுபவத்தை வேறு எதுவும் ஈடுகொடுக்காது. அந்த அனுபவத்தை போன்றுதான் இந்த மொத்த வாழ்வும். எனவே, முடிந்தளவு மகிழ்ச்சியான அனுபவத்தை பெறுவதே வாழ்நாளை சிறப்பாக்கும். 

சந்தோஷத்தை காசு கொடுத்து வாங்கலாம்!

சந்தோஷம் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பார்கள் சிலர், சிலரோ பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நேர்மறையான எண்ணத்திலும் இருப்பார்கள். அந்த வகையில், சில விஷயங்களுக்கு பணம் கொடுத்தால் உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, பணத்தால் சந்தோஷத்தை உங்களால் வாங்க முடியும். 

அந்த வகையில் ஒரு சில முதலீடுகள் உங்களின் மனநலை சீராக வைத்திருக்க உதவும். இந்நிலயைில், இந்த 4 விஷயங்களை வாங்குவதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியை வாங்க முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபணமாகி உள்ளது. உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இந்த 4 விஷயங்களை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | இளமையிலேயே முதுமையான தோற்றமா... இந்த 6 பழக்கங்களை உடனே ஒழித்துக்கட்டுங்கள்!

1. அனுபவங்களுக்கான செலவு

முன்னர் சொன்னது போல் வாழ்க்கையில் எப்போதாவது கிரிக்கெட் கிடைக்கும் அனுபவங்களை பெறுவதற்கு பணம் செலவழிக்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். விஜய் ஆண்டனி கான்சர்ட், ஐபிஎல் போட்டிகள், பயணம் போவது ஆகியவற்றில் பணத்தை செலவழித்தாலும் மகிழ்ச்சி உண்டாகும்.

2. புத்தகத்திற்கான செலவு

புத்தகங்கள் உங்களுக்கான உலகத்திற்கானவை. புத்தகத்தை எழுதபவர் எந்த மொழியாக வேண்டுமானால், எந்த நாடாக வேண்டுமானால் இருக்கலாம். இருந்தாலும் அவரின் கதைக்கு நீங்கள் உங்கள் மனதில் தனி காட்சிகள் அமைத்து அதனை ரசித்து மகிழ்வீர்கள். புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கினால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். புதுமைப்பித்தன் சிறுகதைகள், பொன்னியின் செல்வன் நாவல் ஆகியவற்றை வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவம் உங்களுக்கு வேறு எதில் கிடைக்கும்... சொல்லுங்கள்.

3. சுய முன்னேற்றத்திற்கான செலவு

உங்கள் சுய முன்னேற்றத்திற்கு பணத்தை செலவிடும் போது கிடைக்கும் அனுபவம் என்பது வேற லெவலில் இருக்கும். அதாவது கிரிக்கெட் தொழிலாக வைத்திருப்பவர்கள் தினம் தினமும் பயிற்சிக்கு செல்ல வேண்டும். அதற்கு பணம் கொடுப்பது உங்களுக்கு மகிழ்ச்சியைதான் அளிக்கும். நீங்கள் ஜிம்மிற்கு போவதற்கு கூட பணம் வேண்டும் என்பதை யோசித்து பாருங்கள்.

4. பொதுச் செலவு

மீண்டும் நாம் கிரிக்கெட்டையே உதாரணமாக எடுத்துக்கொள்வோமே... நீங்கள் உங்களின் நண்பர்களுடன் ஜாலியாக மட்டுமே கிரிக்கெட் விளையாடும் நபர் என்றாலும், உங்கள் டீமில் அனைவரும் சேர்ந்து பேட் வாங்குவதற்கோ அல்லது கிட் வாங்குவதற்கோ செலவு செய்யும் போது உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை அளவிட முடியுமா என்ன... 

எனவே, இதுபோன்ற விஷயங்களில் சிக்கனம் பார்க்காமல் பணத்தை செலவிடும் போது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கொட்டிக்கிடக்கும் இந்த அனுபவங்கள் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும். எக்காலத்திலும் உங்களின் நினைவில் இருந்து போகாது. உடலுக்கு தானே அழிவு, ஆன்மாவுக்கு அழிவு இல்லை தானே... சரி அவ்வளவு தூரம் போக வேண்டாம் மக்களே... 

மேலும் படிக்க | இளமையிலேயே முதுமையான தோற்றமா... இந்த 6 பழக்கங்களை உடனே ஒழித்துக்கட்டுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News