ஜனவரி 27, 2022 அன்று ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும்
ஜனவரி 27, 2022 அன்று ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும்...
புதுடெல்லி: ஜனவரி 27, 2022 அன்று ஏர் இந்தியா பங்கு விற்பனையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 24, 2022) ஏர் இந்தியா நிறுவனத்தின் இறுதி வரவு செலவு அறிக்கை வழங்கப்படும். இந்த பேலன்ஸ்ஷீட்டை டாடா மதிப்பாய்வு செய்யலாம்.
வேறு ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை புதன்கிழமை செய்யப்படும் வாய்ப்புகளும் இருக்கிறது. இதுதொடர்பாக ஏர் இந்தியா ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம், நிறுவனத்தின் , இயக்குனர் (நிதி) வினோத் ஹெஜ்மாடி தகவல் தெரிவித்தார்,
இந்த செய்தியை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் இந்த வார இறுதிக்குள் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டி ஏலத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி ஏர் இந்தியாவை டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அரசு விற்றது. டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனத்தின் துணை நிறுவனம் - ரூ.18,000 கோடிக்கு, ஏர் இந்தியாவை வாங்கியது.
அதைத் தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி, டாடா குழுமத்திற்கு, விமான நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளை விற்க அரசு விருப்பம் தெரிவித்ததை உறுதிப்படுத்தும் கடிதம் (LoI) வழங்கப்பட்டது. அக்டோபர் 25 அன்று, இந்த ஒப்பந்தத்திற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் (SPA) மத்திய அரசு கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான மீதமுள்ள சம்பிரதாயங்கள் அடுத்த சில நாட்களில் முடிவடையும் என்றும், இந்த வார இறுதிக்குள் விமான நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் ஜனவரி 24 அன்று தெரிவித்தனர்.
2.8 கோடி ரூபாய்க்கு வாங்கிய விமான நிறுவனத்தை, 28,844 கோடி ரூபாய்க்கு இந்திய அரசு விற்றுள்ளது.
இந்தியாவின் முதல் வணிக உரிமம் பெற்ற விமானி ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதபோய், இந்தியாவின் முதல் விமான நிறுவனத்தை துவங்கினார்.
டாடாவின் நிறுவனங்களின் பெயரான Tata என்ற பெயரை உள்ளடக்கி, ஏர் டாடா ஏர்லைன்ஸ் என விமான நிறுவனத்திற்கு பெயர் வைக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில் விமான நிறுவன சட்டத்தின் மூலம் இந்திய அரசு, ஏர் டாடா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை கையகப்படுத்தியது.
நாட்டுடமை கொள்கையின் அடிப்படையில் இந்திய அரசு கையகப்படுத்தப்பட்டது விமான நிறுவனம் டாடா ஏர்லைன்ஸ். தற்போது ஏர் இந்தியாவாக இருக்கும் அந்த நிறுவனம், பெரும் நட்டத்தில் இயங்கிவருவதால், நிறுவனத்தை மீண்டும் தனியார்மயமாக்குகிறது மத்திய அரசு.
READ ALSO | தனியார் மயமானது ஏர் இந்தியா... 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR