Air India Express Ticket Booking: இந்த ஆண்டின் இறுதிக்குள் நீங்கள் துபாய், சிங்கப்பூர் செல்ல விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஏர் இந்தியா மற்றும் அதன் துணை விமான நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளன. அவற்றின் அட்டவணையை ஏர் இந்தியா (Air India) மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) வெளியிட்டுள்ளன. துபாய்க்குச் செல்லும் பயணிகளுக்கு ஒரு முக்கியமான ஆலோசனையை விமான நிறுவனம் வழங்கியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்பதிவு:
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு (UAE) அமீரகத்திற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த முன்பதிவு 31 டிசம்பர் 2020 வரை மட்டுமே செய்யமுடியும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.airindiaexpress.in/ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.


 



நீங்கள் விரும்பினால், விமான நிலைய கஷ்டமர் கேர், நகர அலுவலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர் மூலமாகவும் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். 2020 அக்டோபர் 31 முதல் டிசம்பர் 31 வரை துபாய்க்கு விமான சேவை கிடைக்கும்.


ALSO READ |  Air India-வில் பயணிக்கப் போகிறீர்களா? Baggage பற்றி கவலை வேண்டாம்: விவரம் உள்ளே


சிங்கப்பூருக்கான விமானம் எப்பொழுது?
சென்னையிலிருந்து சிங்கப்பூர் (Singapore) செல்லும் விமானங்கள் அக்டோபர் 26 மற்றும் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த விமானம் திருச்சியில் இருந்து 2020 அக்டோபர் 25 முதல் நவம்பர் 30 வரை, ஹைதராபாத்தில் இருந்து அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 14, 28 தேதிகளிலும், கொச்சியில் இருந்து அக்டோபர் 30, 13, நவம்பர் 27 அன்று சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்படும். இந்த நாட்களின் அடிப்படையில் உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் திட்டமிடலாம்.


விதிகளை பின்பற்ற வேண்டும்:
இந்த காலகட்டத்தில் பயணிகள் பயணம் தொடர்பான அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். பயணத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு வழிகாட்டுதல்களின்படி பயணத்தை நன்கு திட்டமிடுமாறு விமான நிறுவனம் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.airindia.in/ இலிருந்து சர்வதேச விமானங்களின் கட்டணங்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


ALSO READ |  Air India: துபாய் செல்ல நீங்கள் திட்டமிட்டால், நிச்சயமாக இந்த காப்பீட்டை எடுக்கவும்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR