ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. ஏர் இந்தியா (Air India) இப்போது பயணிகளுக்கு அதிக அளவிலான பேகேஜ் அதாவது, தங்களுடன் அதிக அளவில் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. கொரோனா (Corona) தொற்றுநோய் காரணமாக, முன்னதாக, விமான நிறுவனங்கள் பயணிகளின் சாமான்களுக்கான அளவை குறைத்திருந்தன என்பது நினைவிருக்கலாம்.
ஏர் இந்தியா விமான நிறுவனம் வழங்கிய நிவாரணத்திற்குப் பிறகு, இப்போது பயணிகள், எகனாமி வகுப்பில் 25 கிலோவும், வணிக வகுப்பில் 35 கிலோவும் எந்த கட்டணமும் இன்றி கொண்டு செல்ல முடியும். இதை விட அதிகமான சாமான்கள் இருந்தால், பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஏர் இந்தியா சார்பாக, பேகேஜில் விதிக்கப்பட்டிருக்கும் Pre-COVID விதிகளை அமல்படுத்துவது குறித்து ட்வீட் செய்து தகவல் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் சாமான்கள் குறித்த கூடுதல் தகவல்களை http://airindia.in/baggage.htm என்ற இணையதளத்திலிருந்து பெறலாம்.
#FlyAI : Air India is glad to be able to offer its unparalled maximum baggage allowance again! 35 kgs for Business Class; 25 kgs for Economy Class! Leave your weight of worries with us & enjoy your flight. For more information, please click on https://t.co/uAJ221C8u3 pic.twitter.com/K36Envonzm
— Air India (@airindiain) October 11, 2020
லாக்டௌனுக்கு பின்னர் விமானங்கள் இயங்கத் துவங்கியபோது, ஏர் இந்தியா சாமான்களுக்கான புதிய விதிகளை உருவாக்கியது. அதன் கீழ் ஏர் இந்தியா சிங்கிள் பேகேஜ் அதாவது ஒற்றை சாமான்களை (baggage) அனுமதித்தது. இது அதிகபட்சமாக 23 கிலோ எடையை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதாவது, பேகேஜின் எடை 10 கிலோவாக இருந்தாலும் சரி 23 கிலோவாக இருந்தாலும் சரி, பயணிகள் தங்களுடன் ஒரு சாமானை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
ALSO READ: துபாய் செல்லும் விமானத்தை ஏர் இந்தியா அறிவித்தது, அட்டவணை என்ன?
கொரோனா தொற்றுநோயால் எற்பட்ட சூழ்நிலைகள், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் செக்-இன் செயல்முறைகளுக்கு எடுக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை மனதில் கொண்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளை விமான நிலையத்திற்கு சற்று முன்னதாக வருமாறு அறிவுறுத்தியுள்ளது.
விமான நிலையத்தை அடைந்த பிறகு, அவர்கள் செக்-இன் செய்ய போதுமான நேரம் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுமாறு விமான நிறுவனங்கள் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளன.
ALSO READ: இந்த நாட்டிற்கு Oct 25 முதல் கூடுதல் விமானங்கள்: Air India
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR