புதுடெல்லி: ஏர் இந்தியா விற்பனை தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட்து. ஏலத்தில், சுமார் 18000 கோடி ரூபாய் ரூபாய்க்கு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர் இந்தியா விற்பனை தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்கியதை மத்திய அமைச்சர்கள் குழு உறுதி செய்ததாக மத்திய அரசு செயலர் தெரிவித்தார்.  


68 வருட இடைவெளிக்குப் பிறகு ஏர் இந்தியாவின் நிறுவனரான டாடா சன்ஸின் கைகளுக்கே விமான நிறுவனம் திரும்புகிறது.  



ஏர் இந்தியாவிற்கு இருக்கும் கடனுக்காக 15000 கோடி ரூபாயை டாடா சன்ஸ் குழுமம் வைத்துக் கொள்ளும். மீதமுள்ள தொகை, ஏர் இந்தியா நிறுவனத்திடம் கொடுக்கப்படும்.


2017ஆம் ஆண்டு தொடங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை இன்று முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட விமான நிறுவனம் நாட்டுடமையாக்கப்பட்டது. தற்போது கால சுழற்சியில் மீண்டும் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் விமான நிறுவனம் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பல ஆண்டுகால மந்தநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடன் சுமையில் உள்ள பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் ஏல விற்பனை முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



புகழ்பெற்ற தொழிலதிபரும் இந்தியாவின் முதல் வணிக உரிமம் பெற்ற விமானியுமான ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதபோய் டாடா விமான நிறுவனத்தை துவங்கினார். டாடா குழுமம்-ஏர் இந்தியா உறவு 1932ம் ஆண்டில் உருவானது. தனது பயணிகள் விமான சேவைகளை 1938ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கும் விரிவாக்கியது டாடா நிறுவனம். 


டாடாவால் தோற்றுவிக்கப்பட்ட விமான நிறுவனம்நிறுவனங்களின் பெயர் டாடா ஏர் டாடா ஏர்லைன்ஸ் என மாற்றப்பட்டது. புகழ்பெற்ற விமான நிறுவனமானது, பர்மாவில் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் விமானப்படைக்கு ஆதரவாக செயல்பட்டது.


போர் முடிந்தவுடன், விமான நிறுவனம், தனது பெயரை மாற்றியது. அப்போது வைக்கப்பட்டதுதான் ‘ஏர் இந்தியா’ மத்திய அரசு விரைவில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்கியது. 1953 ஆம் ஆண்டில் விமான நிறுவன சட்டத்தின் மூலம், டாடா சன்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்திய அரசாங்கம், அதனை நாட்டுடமையாக்கியது.



பல தசாப்தங்கள் அரசின் கட்டுப்பாட்டில் பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவின் கடன் சுமையும் அதிகமானது. ஒருகட்டத்தில், கடன் சுமை மிகவும் அதிகமாக மத்திய அரசு மீண்டும் விமான நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை முதலீடு செய்வதற்கான ஏலத்திற்கு அழைப்புவிடுத்தது. 


இது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் 100 சதவீத பங்குகளையும் ஏர் இந்தியா SATS (Air India SATS) வில் 50 சதவீத பங்குகளையும் உள்ளடக்கியது. நான்கு ஏலதாரர்கள், விமான நிறுவனத்தின் ஏலத்தில் கலந்துக் கொண்டனர். அதில் ஸ்பைஸ்ஜெட் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் சிங் மற்றும் டாடா சன்ஸ் மட்டுமே முன்னணியில் இருந்தனர்.  


2016ம் நிதியாண்டில் ரூ. 3,836.78 கோடி, 2017ம் நிதியாண்டில் ஏர் ரூ .6,452.89 கோடி, 2018ம் நிதியாண்டில் ரூ .5,348.18 கோடி, 2019ம் நிதியாண்டில் ரூ .8,556.35 கோடி மற்றும் 2020ம் நிதியாண்டில் ரூ .7,982.83 கோடி இழப்பை பதிவு செய்துள்ளது ஏர் இந்தியா விமான நிறுவனம். தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் மொத்த கடன் சுமார் 43,000 கோடியாகும்.


Also Read | டாடா குழுமத்திடம் செல்கிறதா ஏர் இந்தியா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR