உள்நாட்டு விமான தடங்களில் (domestic flights) மேலும் விமானங்களை இயக்க Air India முடிவு செய்துள்ளது.பயணிகள் வசதிக்காக மேலும் பல உள்நாட்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாக Air India ஜூன் 22 அன்று தனது ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் (civil aviation ministry ) உத்தரவை அடுத்து, பயணிகளின் வசதிக்காக, உள்நாட்டு விமான தடங்களில், மேலும் பல விமானங்களை Air India இயக்க உள்ளது. இந்த சேவை ஜூன் 25 முதல் தொடங்கும்.


ALSO READ | கொரோனா பாதிப்பில் இரண்டாமிடம் பிடித்தது டெல்லி..! 2,909 பேர் மரணம்


இந்த விமான வழித்தடங்கள்(domestic flights) : தில்லி-ராஞ்சி-தில்லி; மும்பை-ஹைதராபாத்-மும்பை; ஹைதராபாத்-விசாகப்பட்டினம்-ஹைதராபாத்; தில்லி-கோயம்புத்தூர்-தில்லி; மும்பை-போபால்-மும்பை; மும்பை-கொல்கத்தா-மும்பை; தில்லி-இந்தூர்-தில்லி; பெங்களூரு-சண்டிகர்-பெங்களூரு; தில்லி-திருப்பதி-தில்லி; மும்பை-ராஜ்கோட்-மும்பை; மும்பை-கொச்சின்-மும்பை; மற்றும் மும்பை-திருப்பதி-விசாகப்பட்டினம்-மும்பை.


இது தவிர பல வழித்தடங்களின் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போக்குவரத்து அளவை 33% சதவிகிதம் என்ற அளவை எட்டுவதே அமைச்சகத்தில் நோக்கம்  மற்றும் முயற்சி ஆகும்.


ALSO READ | Immunity அதிகரிக்க கஷாயம் குடிக்கிறீர்களா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்!!


கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்து, விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு, மே 25 அன்று உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. தற்போது, விமானங்கள் தங்களது மொத்த இருக்கை வசதியில், 33% என்ற அளவிற்கு குறைவான ஆட்களுடன் விமானத்தை இயக்கி வருகின்றனர்.