மேற்கு வங்காள பகுதியான பக்தோக்ராவில் இருந்து நேற்று டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயங்காததால் விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏசி இயங்காத காரணத்தால் புழுக்கம் ஏற்பட்டு தங்களிடம் இருந்த பேப்பர், நோட்டு, கை விசிறி, குறிப்பு புத்தகம் போன்றவற்றால் காற்று வீசிக் கொண்டு டெல்லி வந்து சேர்ந்தனர்.


விமானம் டெல்லி வந்ததும், பைலட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி பயணிகள் விமானத்தை விட்டு இறங்கவில்லை.


மேலும், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் பெண் போதிய காற்று மற்றும் ஏசி இல்லாமல், ஆக்சிஜன் கேட்டுள்ளார். ஆனால், ஆக்சிஜன் சிலிண்டரும் காலியாக இருந்துள்ளது.


இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.