கேரளா தங்கக் கடத்தல்: கோழிக்கோடு விமானநிலையத்தில் மீண்டும் தங்கம் பறிமுதல்!!!
கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கோழிக்கோடு விமானநிலையத்தில் பயணிகளிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...
புதுடெல்லி: கோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடமிருந்து தங்க கம்பிகளையும், பிற வடிவிலான தங்கத்தையும் விமான புலனாய்வு பிரிவினர்பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமான நிறுவனத்தின் G9454 விமானத்தில் கோழிக்கோட்டிற்கு பயணித்த இரண்டு பயணிகளிடமிருந்து 334 கிராம் தங்கம் மற்றும் 230 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயிலிருந்து வந்த இரண்டு பயணிகளிடமிருந்து 464 மற்றும் 468 கிராம் தங்கம், 45 அட்டைப்பெட்டிகள் சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன்களையும் மாநில சுங்க ஆணையம் (தடுப்பு) பறிமுதல் செய்துள்ளது.
தங்கம் தள்ளுவண்டி பைகளின் சட்டத்தில் (frame of trolley bags) மறைக்கப்பட்டிருந்தது.இதைத்தவிர, 77.200 கிராம் எடையுள்ள நான்கு தங்க பிஸ்கட்களையும் ஒரு பெண் பயணியிடம் இருந்து விமான புலனாய்வு பிரிவு பறிமுதல் செய்தது.
கேரளாவுக்கும் தங்கக் கடத்தலுக்கும் உள்ள தொடர்பு பல காலமாக நீடிப்பதே. கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)விசாரணை நடத்தி வருகிறது.
Read Also | அருமை! மலிவானது தங்கத்தின் விலை, சமீபத்திய விலை என்ன?